tamilnaadi 39 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் சுற்றிவளைக்கப்பட்ட கடன் வழங்கும் நிலையம்

Share

கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில் இணையக் கடன் வழங்கும் நிலையமொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது ஐந்து சீனப் பிரஜைகளையும் ஒரு இலங்கையரையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.

மேலும், 8 கணினிகள், 13 மடிக்கணினிகள் மற்றும் 49 கையடக்க தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த மோசடி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இணையதளம் மூலம் கடன் வழங்கும் போது, ​​கடனாளியின் கையடக்க தொலைபேசிகளின் தனிப்பட்ட தகவல்களை, OPT எண் மூலம் பெற்று, சமூகத்தில் சில தகவல்களை பரப்பி பணம் வழங்குமாறு மிரட்டியதாக பொலிஸாருக்கு தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகள் கணினி குற்றத்தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் எனவும், இது தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி புலனாய்வுப் பிரிவினருக்கோ தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...