8ffa663b9ee09494a60dd1afb9f3e806Y29udGVudHNlYXJjaGFwaSwxNjgzMDI3Nzg2 2.70920985
உலகம்செய்திகள்

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த பிரதமர் ரிஷியின் மனைவி

Share

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்த சலுகை ஒன்றின் மூலம், அவரது மனைவியான அக்‌ஷதா மூர்த்திக்கு லாபம் கிடைக்கலாம் என்ற குற்றச்சாட்டு சர்ச்சையை உருவாக்கியது.

கடந்த ஆண்டு, பிரித்தானிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது. அதில், குழந்தைகள் நலன் அமைப்புகளுக்கான உதவித்தொகை, சில நிபந்தனைகளுக்கு உட்படும் நிலையில் இரட்டிப்பாக்கப்படுவதாக அறிவித்திருந்தார் சேன்ஸலர் ஜெரமி ஹண்ட்.

பிரதமர் ரிஷியின் மனைவியான அக்‌ஷதா மூர்த்தி, குழந்தைகள் நல அமைப்பான Koru Kids என்னும் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்தார்.

ஆகவே, பிரதமர் அறிவித்த சலுகை மூலம், அவரது குடும்பத்துக்கே கூடுதல் இலாபம் கிடைக்கிறதா என்பதைக் குறித்து ரிஷி பதிலளிக்கவேண்டுமென அரசியல்வாதிகள் பலர் கோரியிருந்தனர்.

மேலும், Koru Kids நிறுவனத்தில் ரிஷியின் மனைவி பங்குதாரராக உள்ள விடயத்தை அவர் மறைத்ததாக சில பிரித்தானிய அரசியல்வாதிகள் பிரச்சினை எழுப்பினார்கள். இந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை உருவாகியது.

ஆகவே, அந்த சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வர முடிவு செய்த அக்‌ஷதா. தான் பங்குதாரராக இருந்த குழந்தைகள் நல அமைப்பான Koru Kids நிறுவனத்திலிருந்த தனது பங்குகளை, தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நன்கொடையாக வழங்கிவிட்டார்.

ஆனால், தனது பங்குகளை தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடையாக வழங்கியதிலும் அவருக்கு லாபம்தான் கிடைத்துள்ளது.

Koru Kids நிறுவனத்திலிருந்த தனது பங்குகளை விற்று, அதில் கிடைத்த பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார் அக்‌ஷதா. பொதுவாக ஒருவர் பங்குகளை விற்பதால் கிடைக்கும் தொகைக்கு, Capital gains tax என்னும் வரி செலுத்தவேண்டியிருக்கும்.

ஆனால், தான் பங்குகளை விற்றதால் கிடைக்க பணத்தை அக்‌ஷதா தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாலும் அவருக்கு லாபம்தான் கிடைத்துள்ளது. ஏனென்றால், தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் நன்கொடைக்கு வரி கிடையாது.

ஆக, பங்குகளை விற்று நன்கொடையாக கொடுத்ததால், ஒரு பக்கம், அக்‌ஷதா சர்ச்சையிலிருந்தும் தப்பிவிட்டார், அதே நேரத்தில் அவர் அந்த தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளித்ததால், தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் நன்கொடைக்கு வரி கிடையாது என்பதால், அவர் மிகப்பெரிய ஒரு தொகையை வரியாக செலுத்துவதிலிருந்து அவருக்கு விலக்கும் கிடைத்துள்ளது.

ஆக மொத்தத்தில், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிட்டார் அக்‌ஷதா.

Share
தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...