Connect with us

இலங்கை

வடக்கு கிழக்கு தொடருந்து கடவை காவலர்கள் பணிப்புறக்கணிப்பு

Published

on

tamilni 76 scaled

வாழ்வாதற்கான சம்பளம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு, கிழக்கில் உள்ள தொடருந்து கடவை காவலர்கள் இரண்டு நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதியின் வடக்கிற்கான விஜயத்தை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு ஜனவரி 4 ஆம் திகதியான இன்று காலை 6 மணி முதல் 6ஆம் திகதி காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவித்துள்ள தொடருந்து கடவை காவலர்கள் சங்கத்தின் தலைவர், அந்த நேரத்தில் பயணிகளை பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறார்.

சரியான ஊதியம் இன்றி, கடந்த 11 வருடங்களாக நாடளாவிய ரீதியில் 2,064 தொழிலாளர்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தொடருந்து கடவை காவலர்களாக கடமையாற்றி வருவதாக, முல்லைத்தீவு ஊடக மையத்தில் கடந்த நேற்று (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அந்த சங்கத்தின் தலைவர் ரொஹான் ராஜ்குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு தொழிலாளிக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் கொடுப்பனவே கிடைப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலிஸாரின் கீழ் கொத்தடிமைகளாக கடமையாற்றும் தொடருந்து கடவைக் காவலர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு வடக்கிற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதிக்கு அறிவிக்கவே இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்த ரொஹான் ராஜ்குமார், வாழ்வதற்கான சரியான ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.

“பொலிஸாரின் அடிமைகளாக இருக்கும் எம்மை உடனடியாக விடுதலை செய்யுமாறு எதிர்வரும் 4ஆம், 5ஆம், 6ஆம் திகதிகளில் வடபகுதிக்கு வரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவிக்கும் வகையில் வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கின்றோம்.

” தொடருந்து திணைக்களத்தின் கீழ் நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி வரும் தொடருந்து கடவை காவலர்களின் ஒன்றியம், சரியான சம்பளம் வழங்கப்படாவிட்டால் கடுமையான தொழில்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வலியுறுத்துகிறது.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 1 ஜனவரி 2025 – Daily Horoscope

Happy New Year: இன்றைய ராசிபலன் 1.01.2025, குரோதி வருடம் மார்கழி 17, புதன் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷபம் ராசியில் உள்ள ரோகிணி,...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 29 டிசம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 29 டிசம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 29.12.2024 குரோதி வருடம் மார்கழி 14, ஞாயிற்று கிழமை, சந்திரன்...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் : 26 டிசம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 26 டிசம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 26.12.2024, குரோதி வருடம் மார்கழி 11, வியாழக் கிழமை, சந்திரன்...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் : 25 டிசம்பர் 2024 – Daily Horoscope- Happy Christmas

இன்றைய ராசி பலன் : 25 டிசம்பர் 2024 – Daily Horoscope- Happy Christma இன்றைய ராசிபலன் 25.12.2024, குரோதி வருடம் மார்கழி 10, புதன்...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் : 24 டிசம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 24 டிசம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 24.12.2024, குரோதி வருடம் மார்கழி 9, செவ்வாய்க் கிழமை, சந்திரன்...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசி பலன் : 22 டிசம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 22 டிசம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 22.12.2024, குரோதி வருடம் மார்கழி 7 ஞாயிற்று கிழமை, சந்திரன்...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசி பலன் : 20 டிசம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 20 டிசம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 20.12.2024, குரோதி வருடம் மார்கழி 5 வெள்ளிக் கிழமை, சந்திரன்...