kaje
இலங்கைசெய்திகள்

தமிழ் கைதிகளுக்கு பாலியல் சித்திரவதை! – சபையில் கஜேந்திரன்

Share

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் பாலியல் ரீதியான சித்திரவதைகளுக்கு உட்படுகின்றனர்.

இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்துள்ளார்..

2009 ஆம் ஆண்டளவில் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளே இவ்வாறு சித்திரவதைகளுக்கு உட்படுகின்றனர்.

தமிழ் இளைஞர்களின் அந்தரங்க உறுப்புக்கள் மிகக் கேவலமான முறையில் சோதனை செய்யப்படுகின்றன எனவும் இதுவொரு பாலியல் சித்திரவதை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அநுராதபுரம் சிறைச்சாலை சென்று தமிழ் அரசியல் கைதிகளிடம் வெறியாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தமிழ் மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் இதுவரை லொஹான் ரத்வத்த புரிந்த குற்றச்சாட்டுக்களுக்கு அவரின் மற்றைய அமைச்சுப் பதவிகள் பறிக்கப்படவில்லை.அவரிடமிருந்து அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்டு நாடாளுமன்றிலிருந்து அவரை வெளியேற்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

பயங்கரவாதத் தடைச்சத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட 12 தமிழ் இளைஞர்கள், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 26ஆம் திகதி அந்த சிறைச்சாலைக்குக் கொண்டுவரப்பட்ட இந்த இளைஞர்களை 29ஆம் திகதி நிர்வாணமாக்கி சோதனையிட்டுள்ளனர்.

540 நாள்களாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்களை பல்வேறுவிதமான கொடூர சித்திரவதைகளுக்கு உள்ளாக்குகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...