சிவப்பு பட்டியல் – இலங்கைக்கு விடுதலை?
சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளின் சிவப்புப் பட்டியலிலிருந்து இலங்கையை நீக்கிக் கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு அழைப்பது தொடர்பில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் நாட்டுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டே இராஜதந்திர மட்டத்தில் இது தொடர்பான கலந்துரையாடல்களை நாங்கள் தற்போது ஆரம்பித்திருக்கிறோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment