rtjy 45 scaled
இலங்கைசெய்திகள்

இரண்டு வாரங்களுக்குள் இறக்குமதி செய்யப்படவுள்ள சம்பா

Share

இரண்டு வாரங்களுக்குள் இறக்குமதி செய்யப்படவுள்ள சம்பா

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் சம்பா அரிசி ஒருதொகை நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் என அரச வர்த்தக பொது கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

50,000 மெட்ரிக் தொன் சம்பா அரிசியை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு அண்மையில் அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் இந்த இறக்குமதி மேற்கொள்ளப்படுவதாக அரச வர்த்தக பொது கூட்டுத்தாபன தலைவர் ஆசிரி வலிதுந்தர தெரிவித்துள்ளார்.

சம்பா அரிசியை இறக்குமதி செய்வதற்கான கேள்விப்பத்திரம் கோரும் நடவடிக்கை நேற்றுமுன் தினம் நிறைவடைந்ததாகவும், இதனையடுத்து அரிசி இருப்பு இந்தியாவிலிருந்தே கொள்வனவு செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாட்டு விலைக்கு மேல் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான சோதனைகள் தொடரும் என நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது.

அரிசியை அதிக விலைக்கு விற்ற 1,000க்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
arested 2
இலங்கை

காணித்தகராறால் பறிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் உயிர்.

காணித் தகராறு காரணமாக, அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள...

சி.டி.விக்ரமரத்ன
இலங்கை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார் – பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளி.

மாலபே, தலஹேன பிரதேசத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன...

Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...