rtjy 46 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை அவசியம்

Share

தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை அவசியம்

தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம் என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் தற்போது மீண்டுமொரு உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது ஆனால் இது பொறுப்புக்கூறலிற்கான பாதையையோ அல்லது உரிய சாட்சியங்கள் பாதுகாப்பு பொறிமுறையையோ ஏற்படுத்தாது என்ற கரிசனை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்கொட்டிஸ் தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே தனது உரையில் தெரிவித்துள்ளதாவது,

மனித உரிமை மீறல்களை சாத்தியமாக்கும் சட்டங்கள் குறித்தும் கரிசனைகள் காணப்படுகின்றன.

பயங்கரவாத தடைச்சட்டம் 1979 ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது முதல் அரசியல் கைதிகளை நீண்ட காலம் தடுத்துவைப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

மிகமோசமான கறுப்பு ஜூலை கலவரத்தின் பின்னர் நிகழ்ந்த வெலிக்கடை படுகொலைகள் என அழைக்கப்படும் சிறைச்சாலை படுகொலையில் கொல்லப்பட்ட 53 பேரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களே.

பயங்கரவாத தடைச்சட்டம் அரசாங்கத்தை எதிர்ப்பவர்களை கைதுசெய்யப்பயன்படுகின்றது அந்த சட்டம் தற்போது நீக்கப்படலாம் என்கின்ற போதிலும் புதிய உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மோசமானதாகயிருக்கலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது எனவும் மேலும் உரையாற்றியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
world 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திறைசேரி நிதி மோசடி: நாடாளுமன்றக் குழு கடமையிலிருந்து தவறிவிட்டது – ரஜித் கீர்த்தி தென்னக்கோன் காட்டம்!

இலங்கை திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மாயமான விவகாரத்தில், அரச நிதி தொடர்பான...

world 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி அகழ்வாய்வு: ஏழாம் நாளில் கைக்குழந்தை உட்பட 4 எலும்புக்கூடுகள் மீட்பு – மொத்த எண்ணிக்கை 250 ஆக உயர்வு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் இடம்பெற்று வரும் மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஏழாம் நாள் பணிகள்...

world 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் நிதி மூன்றாம் நபருக்கு மாற்றம்: சி.ஐ.டி வசம் சிக்கிய இலத்திரனியல் உபகரணங்கள்!

இலங்கை திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, அங்கீகரிக்கப்படாத மூன்றாம் நபர் ஒருவரின் கைகளுக்குச்...

world 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எச்சரிக்கை: அதிக வெப்பத்துடன் பிற்பகலில் மழையும்! வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் ஒருபுறம் கடும் வெப்பமும், மறுபுறம் பிற்பகல் வேளைகளில் மழையும் என இருவேறுபட்ட...