tamilni 87 scaled
இலங்கைசெய்திகள்

சாய்ந்தமருது பகுதியில் 13 வயது சிறுவன் சடலமாக மீட்பு

Share

சாய்ந்தமருது பகுதியில் 13 வயது சிறுவன் சடலமாக மீட்பு

சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள குர்ஆன் மதரஸாவில் சிறுவன் ஒருவன் தூக்கில் தொங்கி நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் மதர்ஸாவின் நிர்வாகி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவனின் மரணத்தில் சந்தேகம் தெரிவித்து பொதுமக்கள் நேற்று (05.11.2023) செவ்வாய்க்கிழமை இரவு மதரஸாவை முற்றுகையிட்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த 13 வயதுடைய எம்.எம்.முஷாரப்என்ற சிறுவனே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த மதரஸாவில் தங்கியிருந்து குர்ஆன் கல்விகற்று வந்த மாணவன் சம்பவதினமான நேற்று மாலை துக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் அந்த மாணவனின் மரணம் தற்கொலையல்ல கொலையாகவே இருக்கும் எனவும் மதர்ஸாவின் நிர்வாகி மீது ஏற்கனவே அதிகளவிலான பொலிஸ் முறைப்பாடுகள் இருப்பதாகவும் கூறி பொதுமக்கள் மதரஸாவை முற்றுகையிட்டு கலகத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைத்ததுடன் நிர்வாகியை கைது செய்துள்ளனர்.

அத்துடன் குழப்பத்தில் ஈடுபட்டவர்களை மதராஸாவின் மாண்பை பேணும் விதமாக மக்கள் கலைந்து செல்லுமாறும், இந்த மரணம் தொடர்பில் நியாயமான விசாரணையை முன்னெடுக்க பொலிஸார் தயாராக இருப்பதாகவும், தடயியல் பொலிஸாரையும், நீதவானையும் வரவழைத்து மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாவும் பொதுமக்களுக்கு வழங்கிய உறுதியையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றிருந்தனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Share
தொடர்புடையது
Retirement
இலங்கை

ஓய்வு வயது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்!

  ஓய்வுபெறும் வயதில் மாற்றம் செய்வது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் தற்போது பெறப்பட்டு வருவதோடு,...

traffic
இலங்கை

மோசமான சாதனையினை பதிவு செய்தது ஸ்ரீ லங்கா!

  உலகின் போக்குவரத்து நெரிசல் குறித்த Numbeoவின் 2026ஆம் ஆண்டுக்கான இடைக்கால அறிக்கை இவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ளது....

k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...