rtjy 217 scaled
இலங்கைசெய்திகள்

அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

Share

அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் குறைந்தது 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்களில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கில், ‘மக்கள் போராட்ட இயக்கம்’ இந்த ஆர்ப்பாட்டத்தை நேற்றையதினம் (25.11.2023) ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது அமெரிக்க ஜனாதிபதியின்; புகைப்படத்தை ஒரு குழுவினர் எரிக்க முயன்றதால் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது நாரஹேன்பிட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக முதலில் போராட்டக்காரர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பின்னர், கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து ஆக்ரோஷமாக நடந்து கொண்ட இரண்டு ஆர்ப்பாட்டக்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....