rtjy 188 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை பாடசாலை கல்வியில் மாற்றம்

Share

இலங்கை பாடசாலை கல்வியில் மாற்றம்

2024இற்கான புத்தங்கள் தற்போது அச்சிடப்பட்டுள்ளன. சீருடைகள் அடுத்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னதாக வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் பாடசாலை கல்வியை டிஜிட்டல் மயமாக்க எதிர்பார்த்திருக்கின்றோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கோவிட் பரவலின் பின்னரான காலத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசிலின் காரணமாக ஆரம்ப கல்வி நெருக்கடிகளை சந்திப்பதாக கல்வி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அது தொடர்பில் கவனம் செலுத்தியிருக்கிறோம்.

பாடசாலை கல்வியை டிஜிட்டல் மயமாக்க எதிர்பார்க்கிறோம். உலகம் தொழில்நுட்பத்துடன் முன்னோக்கிச் செல்லும் போது நமது பிள்ளைகளின் கல்வித் தேவையை தாமதப்படுத்த முடியாது. அதற்கு அவசியமான கல்வி மறுசீரமைப்புக்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

2024இற்கான புத்தங்கள் தற்போது அச்சிடப்பட்டுள்ளன. சீருடைகள் அடுத்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னதாக வழங்கப்படும். அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டத்தையும் ஆரம்பிக்கவுள்ளோம்.

யுனெஸ்கோவுடன் இணைந்து பாடசாலை மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். யார் கல்வி அமைச்சராக இருந்தாலும் 4 வருடங்களுக்குள் அந்த உதவிகள் நாட்டுக்கு கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
சுரேஸ் பிரேமச்சந்திரன்
இலங்கை

குற்ற செயல்களில் தற்கால அரசுக்கும் பங்குண்டு – சுரேஸ் பிரேமச்சந்திரன்

மட்டக்களப்பு – வாவிக்கரை வீதியில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற...

சுகீஸ்வர பண்டார
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளருக்கு விளக்கமறியல்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு ஜூலை 30...

காணாமல் ஆக்கப்பட்டோர்nnnn
இலங்கை

அவர்களின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை – தூதுக்குழுவினரின் வருகையினை தொடர்ந்து வந்துள்ள கருத்து.

இன்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதக் புதைகுழியை பார்வையிட்ட பின்னர்...

Ravindra Wijegunaratne
இலங்கை

முன்னாள் கடற்படைத் தளபதிக்கு பிணை.

முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன 2008ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்...