சீன இறக்குமதி உரத்தில் நோய்களை உண்டாக்கும் பக்றீரியாக்கள்!!!
இலங்கைக்கு சீனாவால் இறக்குமதி செய்யப்படவிருந்த சேதன உரத்தின் மாதிரிகளில் மிகப்பெரும் ஆபத்துள்ள பக்றீரியாக்கள் உள்ளடங்கியுள்ளமை உறுதிப்படுத்துள்ளது.
இதனை எதிர்க்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
சீனாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவிருந்த சேதன உரத்தின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அந்த பரிசோதனையில் பெரும் ஆபத்துக்களை ஏற்படுத்தும் பாரதூரமான பக்றீரியாக்கள் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பக்றீரியாக்கள் பெரும் நோய்களை ஏற்படுத்தக் கூடியவை என்பதுடன் இதனால் ஏற்படக் கூடிய நோய்க்கு மருந்தும் இல்லை.
இவ்வாறான 95 மெற்றிக் தொன் எடையுள்ள உரத்தை சீனாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட இருந்ததோடு இதற்காக 63 மில்லியன் டொலர் செலவிடப்படவிருந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment