tamilni 159 scaled
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கும் மழை வீழ்ச்சி!

Share

அதிகரிக்கும் மழை வீழ்ச்சி!

இன்றைய காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்க கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

இதேவேளை மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Share
தொடர்புடையது
dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...

Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...