tamilni 158 scaled
உலகம்செய்திகள்

கனடாவில் துப்பாக்கிச் சூடு

Share

கனடாவில் துப்பாக்கிச் சூடு

கனடாவின் எட்மண்டன் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இந்திய வம்சாவளி பிரஜை மற்றும் அவரது 11 வயதுடைய மகன் ஆகிய இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

எட்மண்டன் நகரில் விற்பனை நிலையம் ஒன்றுக்கு அருகே மர்ம நபர்கள் நடத்திய குறித்த துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் 41 வயதுடைய ஹர்பிரீத் சிங் உப்பல் என்ற சீக்கியரும், அவருடைய 11 வயது மகன் ஆகியோரே சம்பவத்தில் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் எட்மண்டன் நகர பொலிஸார் தகவல் வெளியிடுகையில்,

“இந்த தாக்குதலின்போது, உயிரிழந்த சிறுவனின் நண்பன் ஒருவர் காரில் இருந்துள்ளார். அவர், எந்தவித காயமுமின்றி தப்பிவிட்டார்.

இந்த தாக்குதலில் ஹர்பிரீத் சிங் உப்பலை பின்தொடர்ந்தவர்கள், காரில் அவருடைய மகன் இருக்கிறார் என தெரிந்ததும் உள்நோக்கத்துடன் துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளனர் என்பதை ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் அறிய முடிகிறது.

உப்பலுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் உள்ளன. அது தொடர்பான விசாரணைகளை அடுத்த ஆண்டு ஏப்ரலில் ஆரம்பிக்க அரசு திட்டமிட்டிருந்தது.

எனினும் இரு குழுக்களுக்கு இடையேயான மோதலில் உப்பல் கொல்லப்பட்டு இருக்க கூடும் என பொலிஸார் தரப்பில் நம்பப்படுகிறது.

மேலும், இதுபற்றிய உண்மைகள் அனைத்தும் விசாரணைகளின் பின்னரே தெரியவரும்.” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...