அமெரிக்கத் தூதுவர் பதவி! – எம்.பி பதவி இராஜினாமா
அமெரிக்கா மற்றும் மெக்ஸிக்கோவுக்கான புதிய இலங்கைத் தூதுவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க பொறுப்பேற்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதற்கு உத்தேசித்துள்ளேன் என அவர் தெரிவத்துள்ளார்.
இதுவரை அமெரிக்காவின் இலங்கைத் தூதுவராக இருந்த ரவிநாத் ஆரியசிங்க தனது ஓய்வை அறிவித்த நிலையில், அந்த பதவிக்கு பொருத்தமானவர் மஹிந்த சமரசிங்க என ஜனாதிபதி பரிந்துரைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் புதிய வரவு – செலவுத் திட்டத்தின் பின்னரே இவர் பதவியை இராஜினாமா செய்வார் என தெரிவிக்கப்படுகிறது.
இவர் நல்லாட்சி அரசின்போதும் மஹிந்த ராஜபக்ச ஆட்சியின்போதும் ஜெனிவா விவகாரத்தை கையாண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
                    
                            
                                
				            
				            
				            
				            
 
 
 
 
Leave a comment