tamilni 79 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்: நேரடியாக களமிறங்கவுள்ள அமெரிக்கா

Share

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்: நேரடியாக களமிறங்கவுள்ள அமெரிக்கா

இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் அமெரிக்க இராணுவம் நேரடியாக களத்தில் இறங்கும் என ஈரானையும் ஹிஸ்புல்லா அமைப்பையும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தியதில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலை தாக்கியதில் இஸ்ரேல் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் தமது மக்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பழிவாங்குவோம் என்றும் ஹிஸ்புல்லா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால், அமெரிக்க ராணுவம் நேரடியாக களத்தில் இறங்கும் என ஈரானையும் ஹிஸ்புல்லா அமைப்பையும் அமெரிக்கா எச்சரித்துள்ளதுடன் அமெரிக்கா விமானம் தாங்கிக் கப்பல்களை மத்தியதரைக்கடல் பகுதிக்கு அனுப்பியுள்ளது.

இந்நிலையில், பலஸ்தீனத்திற்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பாரிய விளைவை சந்திக்க நெரிடும் என ஈரான் அமெரிக்காவை எச்சரித்தமை குறிப்பிடத்தக்கது.

காசா பகுதி முழுவதும் கடும் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், இதனால் காசா பகுதி ‘இரண்டு துண்டாக்கப்பட்டுள்ளது’ என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

இதனை இஸ்ரேல் இராணுவ ஊடகப் பேச்சாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், இஸ்ரேலிய படைகள் ‘காசா நகரை சுற்றி வளைத்துள்ளன என்றும், இப்போது தெற்கு காசா மற்றும் வடக்கு காசா என்று இரண்டும் துண்டாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தினர். இதைதொடர்ந்து, காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது.

ஹமாஸ் போராளிகளை ஒட்டு மொத்தமாக ஒழிப்போம் என்ற சபதத்துடன் இஸ்ரேல் போரை தொடர்ந்து வருகின்றது.

இந்த போரில் காசாவில் மட்டும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கி வருகின்றது.

இவர்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் சிறுவர்கள் மற்றும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...