download 3
உலகம்

சுவிஸ் வங்கி கணக்கு விவரங்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு!

Share

தொடர்ந்து 4-வது ஆண்டாக இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்கு விவரங்களை கடந்த மாத இறுதியில் இந்தியாவிடம் சுவிட்சர்லாந்து ஒப்படைத்தாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த 4-வது தொகுப்பில், நூற்றுக்கும் மேற்பட்ட தனிநபர்கள், நிறுவனங்கள் ஆகியோரின் வங்கிக்கணக்கு விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

சிலர் ஒன்றுக்கு மேல் வைத்திருந்த கணக்குகளின் விவரங்களும் அளிக்கப்பட்டுள்ளன

பெரும்பாலும், தொழிலதிபர்கள், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குடியேறிய வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் மற்றும் அரசியல்வாதிகள், முந்தைய அரச குடும்பத்தினர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவற்றில், இந்தியர்களின் பெயர், முகவரி, வங்கியின் பெயர், கணக்கு எண், கணக்கில் நிலுவையில் உள்ள தொகை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆனால், இக்கணக்குகளில் மொத்தம் எவ்வளவு தொகை உள்ளது, எத்தனை பேரின் கணக்குகள் கிடைத்துள்ளன போன்ற விவரங்களை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

இந்தியா மட்டுமின்றி மொத்தம் 101 நாடுகளுடன் சுவிஸ் வங்கிக்கணக்கு தகவல்களை சுவிட்சர்லாந்து பகிர்ந்து வருகிறது. இதுவரை சுமார் 34 லட்சம் கணக்குகளின் விவரங்களை அளித்துள்ளது.

#Swiss #Swissbank

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
Untitled design 15 9
காணொலிகள்உலகம்

கெசினோ வரி 18% ஆக உயர்வு; இலங்கையர்களுக்கான நுழைவுக் கட்டணம் இரட்டிப்பு – பிரதமர் அறிவிப்பு!

கெசினோ உரிமையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரியானது, 2025 அக்டோபர் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்...

23 657d7ed23d1cb md
உலகம்உலகம்செய்திகள்

புகலிடக்கோரிக்கையாளர் தற்கொலை எதிரொலி: மிதவைப்படகு திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு

புகலிடக்கோரிக்கையாளர் தற்கொலை எதிரொலி: மிதவைப்படகு திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு மிதவைப்படகில் தங்கவைக்கப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்ததைத்...

23 6517bd8f77997 1
உலகம்செய்திகள்

ஒரு பொம்மைக்காக தேவையில்லாமல் உயிரைவிட்ட லண்டன் சிறுமி

ஒரு பொம்மைக்காக தேவையில்லாமல் உயிரைவிட்ட லண்டன் சிறுமி லண்டனில் சிறுமி ஒருத்தி கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட வழக்கில்,...

23 6518160b0495b
உலகம்செய்திகள்

மேலிடத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பரபரப்பான அறிக்கை

மேலிடத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பரபரப்பான அறிக்கை அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி முறிந்துள்ள நிலையில், மத்திய...