முடிவுக்கு வருகிறதா அமெரிக்க ஈரான் சமாதான ஒப்பந்தம்?

iran us 1

அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பர மோதல்களில் ஈடுபட்டு வரும் பின்னணியில், இருநாடுகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அதிபரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதில் அளித்துள்ள அவர், அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

அத்தோடு, தாம் எதிர்வரும் காலங்களில் அவர்களுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்த விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார்.

“என்னைப் பொறுத்தவரை, அது முடிந்துவிட்டது. அவர்களுடன் பேசுவது நேரத்தை வீணடிக்கும் செயல், அவர்கள் பொய்யர்கள்” என்றும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இரு தரப்பு பேச்சுவார்த்தையாளர்களும் தங்கள் நேரத்தை வீணடிப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

Exit mobile version