Noul
உலகம்

சீனாவில் நௌல் சூறாவளியின் கோரத்தாண்டவம் – நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து.

Share

நௌல் சூறாவளியால், தென் சீனப் பகுதிகள் மற்றும் ஹொங்கொங்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்து வரும் நிலையில், அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இது குறித்ததான அறிவிப்புகளை சீன தேசிய வானிலை மையம் வழங்கி வருவதுடன், இன்று அதிகாலை 3:50 மணியளவில் குவாங்டாங்- ஹுய்ஷோ பகுதியில் இந்த சூறாவளி கரையை கடந்துள்ளதாகவும், சீனாவின் கரையைக் கடந்த மிக வலுவான சூறாவளி இது என்றும், அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமொன்று கூறியுள்ளது.

நௌல் சூறாவளியானது, மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றை வீசியதுடன், உள்நோக்கி நகர்ந்து படிப்படியாக வலிமை இழந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவாங்டாங் மாகாணத்தில் மட்டும் 7,15,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன், மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதோடு, ஹொங்கொங்கில் பலத்த காற்றினால் கட்டிடப் பலகைகள் சரிந்து விழுந்தன. இந்த இயற்கைச் சீற்றத்தின் காரணமாக ஹொங்கொங் விமான நிலையத்தில் சுமார் 350 விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.

மேலும், ஹொங்கொங்கில் குறைந்தது 9 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
us canada
உலகம்Featured

கனடாவிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது துப்பாக்கி சூடு – பின்னனியில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

கனடாவின் டொராண்டோ நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

kenya gb cracked flag 1080x720px 2
உலகம்

இராணுவப் பயிற்சியை இரத்து – பிரித்தானியா, கென்யா உறவில் விரிசல்.

பிரித்தானியா, கென்யாவில் நடைபெறவிருந்த கூட்டு இராணுவப் பயிற்சியைப் இரத்து செய்த நடவடிக்கையானது, இரு நாடுகளுக்கும் இடையே...

Wildfires
உலகம்

பிரான்ஸில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை.

பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில், குறிப்பாக ஜிரோன்ட் பிராந்தியத்தில் தீவிரமாகப் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அவசரகால...

Attack Ship
உலகம்

ஈரான் எல்லைக்குள் தாக்கப்பட்ட மொசாம்பிக் கப்பல்.

மொசாம்பிக் நாட்டுக் கொடியுடன் ஈரான் கடற்பரப்பிற்கு அருகே தாக்குதலுக்கு உள்ளான சரக்குக் கப்பலில் இருந்த 28...