donalt
உலகம்

ஈரான் மீதான தாக்குதல் – அமெரிக்க அதிபர் வெளியிட்ட அறிவிப்பு.

Share

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானின் அணுசக்தி இலக்குகளைக் கட்டுப்படுத்தி, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் வரை, ஈரான் மீதான புதிய தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையை உடனடியாக, முழுமையாக மீண்டும் திறப்பதற்கும், ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் வழிவகுக்கும் உடன்படிக்கை ஒன்றை கொண்டுவர ஈரானும் பிற மத்திய கிழக்கு நாடுகளும் அவகாசம் கோரியதாக ட்ரம்ப் தனது ‘டிரூத்’ சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி, கோரிக்கையின் பிரகாரம், உலகின் எதிர்கால நலன் கருதியும், அதேபோன்று வளமான மற்றும் வெற்றிகரமான ஈரானின் இருப்புக்காகவும், விரைவாக உடன்படிக்கை ஒன்றை எட்ட முடியும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு, தாக்குதலை ரத்து செய்ய தாம் சம்மதித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், ஈரானிய இலக்குகள் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது தொடர்பான ட்ரம்பின் அச்சுறுத்தல்களை அமெரிக்கப் படைகள் முன்னெடுத்தால், அதற்கு தீர்க்கமான முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

பல முக்கிய உட்கட்டமைப்புகள் மீது ஈரானினால் ஏவப்பட்ட ட்ரோன்களை அழித்துள்ளதாக குவைத் இராணுவம் அறிவித்த சில மணித்தியாலங்களிலேயே, துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சவூதி உயர் அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி நடத்திய தனித்தனி தொலைபேசி உரையாடல்களின் போது இக்கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதன் போது ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி, எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் ஈரான் தீர்க்கமாக பதிலளிக்கும் எனவும் , அமெரிக்காவின் பிராந்திய நிலைகுலைவு நடவடிக்கைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பின்மை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளின் விளைவுகள் குறித்தும் விவாதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
car dubai
உலகம்

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் – இலங்கைக்கு கிடைத்தது யோகம்!

  ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள கடல் போக்குவரத்துத் தடைகள் காரணமாக, இலங்கை ஊடாக புதிய சரக்கு...

Meta Company
உலகம்

மெட்டாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று !

இன்றைய தினம், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா (Meta) மீது, சிறார்களின்...

donalt drump
உலகம்

ஓமானை கடுமையாக எச்சரித்த அமெரிக்க அதிபர்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான மோதல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் ஓமன் தலையிட்டால்,...

antonello da messina
உலகம்

இத்தாலியில் திருடப்பட்ட பலநூறு கோடி ரூபா பெறுமதியான ஓவியங்கள்!

இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெசினா அருங்காட்சியகத்தில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் புகழ்பெற்ற...