Russia Sends Jet
உலகம்

ஈரானுக்கு துணையாக போரில் குதித்தது ரஸ்யா – மத்திய கிழக்கில் அதிகரிக்கிறது பதற்றம்.

Share

மத்திய கிழக்கில் பதற்ற நிலை அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யா தனது மிக பாதுகாப்பான Tu-214PU எனப்படும் “Doomsday” விமானத்தை ஈரானுக்கு வழங்கியுள்ளது.

இந்த விமானம் சாதாரண VIP விமானம் போல் அல்லாமல் ரஷ்யாவின் உயர்மட்ட அரசியல் மற்றும் இராணுவ தலைவர்களை ஏற்றிச் செல்லும் Rossiya Special Flight Squadron-க்கு சொந்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tu-214PU, கடுமையான அச்சுறுத்தல்களிலும் செயல்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு பாதுகாப்பான தொடர்பு மற்றும் Command-Control அமைப்புகளுடன் கூடிய ‘வானில் பறக்கும் கட்டளை மையம்’ என கூறப்படுகின்றது.

அண்மையில் அமெரிக்கா, ஈரானின் ஏவுகணை தளங்கள், ட்ரோன் அமைப்புகள், விமான பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல இராணுவ இலக்குகளை தாக்கியுள்ளது. இதற்கு பதிலடியாக ஈரான், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் மீது தாக்குதல்களினை நடத்தியுள்ளது.

இந்த சூழ்நிலையில், ரஷ்யாவின் “டூம்ஸ்டே” விமானம் தெஹ்ரானில் தரையிறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான இடையிலான உயர் மட்ட இராணுவ மற்றும் அரசியல் ஒத்துழைப்பை வெளிப்படுத்துகிறது.

1989-இல் முதன்முதலாக பறந்த இந்த விமானம், பல்வேறு சிறப்பு பயன்பாடுகளுக்காக மாற்றப்பட்டுள்ளது. அதில் மிகவும் நவீனமயானதாக இந்த Tu-214PU விமானம் காணப்படுகின்றது.

இந்த நடவடிக்கையானது மத்திய கிழக்கில் நிலவும் போர் மற்றும் இதர பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் அபாயம் இருப்பதை உணர்த்தியுள்ளது.

Share
தொடர்புடையது
us iraan 16 1
உலகம்

அமெரிக்காவுடனும் ஈரான் இருக்கிறது – இஸ்மாயில் பகேய்

அமெரிக்கா நடத்திய சமீபத்திய இராணுவத் தாக்குதல்களுக்கு மத்தியிலும், மத்தியஸ்தர்கள் மூலமாக அமெரிக்காவுடனான மறைமுக இராஜதந்திரப் பரிமாற்றங்கள்...

oil price 2
உலகம்

ஏவுகணைகளை தாண்டி எகிறும் எண்ணெய் விலைகள்.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மீண்டும் மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள்...

us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...

US Poretest
உலகம்

அமெரிக்கா முழுவதும் வெடிக்கவுள்ள போராட்டம்.

அமெரிக்கா முழுவதும் சனிக்கிழமை அன்று அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள சுமார் 125 இற்கும் மேற்பட்ட...