மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளதன்னால், உலகெங்கிலும் உள்ள அனைத்து அமெரிக்கர்களும் “மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்குமாறு” அமெரிக்க வெளியுறவுத்துறை உலகளாவிய பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் “மத்திய கிழக்கில் உள்ள சிக்கலான பாதுகாப்புச்சூழல் காரணமாக எதிர்பாராத விதமாக பதற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளது” என கூறியுள்ளது.அத்துடன், முக்கிய இடங்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாகவும் மத்திய கிழக்கிற்கு வெளியே உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும், உள்ளதாகவும் குறிப்பிடபட்டுள்ளது.
தற்போது மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்கள் விமான இரத்துகள் மற்றும் பயண இடையூறுகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தபட்டுள்ளது.
மத்திய கிழக்கிற்கு வெளியே உள்ள அமெரிக்கர்கள் அப்பகுதி வழியாகப் பயணம் செய்வதையோ அல்லது பார்வையிடுவதையோ மறுபரிசீலனை செய்யுமாறும் அமெரிக்க அரசாங்கம் கூறியுள்ளது.

