அக்டோபர் 16-ம் திகதி ஆஸ்திரேலியாவில் டி 20 ஓவர் உலக கோப்பை தொடர் தொடங்குகிறது.
இதில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.
இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை அக்டோபர் 23ந் திகதி எதிர் கொள்கிறது.
இந்த நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
கேப்டன் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
#WorldCupCricket
Leave a comment