இணையத்தில் கசிந்த அண்ணாத்த… அதிர்ச்சியில் உறைந்த படக்குழுவினர்!

Rajini

ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் அண்ணாத்த திரைப்படம் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அண்ணாத்த திரைப்படம் வெளியான சில மணி நேரத்திலேயே தமிழ்ராக்கர்ஸ், மூவிரூல்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட இணையதளங்களில் படம் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது.

இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படத்தை திருட்டு தனமாக இணையத்தில் வெளியிட உயர்நீதி மன்றம் தடை விதித்திருந்த நிலையில் தற்போது தடையை மீறி இணையத்தில் வெளியானமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#CinemaNews

Exit mobile version