நடிகை ராஷ்மிகா மும்பையில் உள்ள கோவில் ஒன்றுக்கு சென்றுள்ளார்.
இவர் வந்த தகவல் அறிந்து ரசிகர்கள் ஏராளமானோர் கோவில் எதிரில் கூடியுள்ளனர்.
ராஷ்மிகா கோவிலை விட்டு வெளியே வந்தபோது ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். அவருடன் கைகுலுக்கவும், செல்பி எடுக்கவும் முண்டியடித்தனர். பாதுகாவலர்களால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அவர் வெளியே அழைத்து வரப்பட்டு காரில் அனுப்பி வைக்கப்பட்டார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
#rashmika