வசூல் வேட்டையினை ஆரம்பித்த ஜனநாயகன்.

Jana Nayagan vijay d 1

அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த தளபதி விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் பல தடைகளை தாண்டி ஜூலை மாதம் வெளியாகிறது.
எச். வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், ப்ரியாமணி, பாபி தியோல் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஜனவரி 9-ஆம் தேதி இப்படம் வெளிவரவிருந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாகவில்லை. கிட்டதட்ட 6 மாதங்களுக்கு பின் பல தடைகளை கடந்து சென்சார் சான்றிதழை பெற்றுள்ளது ஜனநாயகன்.

எதிர்வரும், ஜூலை 24-ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் UK-வில் ஜனநாயகன் திரைப்படத்தின் முன்பதிவு ஆரம்பித்திருக்கிறது.
இதுவரை நடைபெற்ற முன்பதிவில் ஜனநாயகன் ரூ. 1.25 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version