அரசியலில் குதிக்க ஆர்வம் காட்டும் தனுஷ்!

dhanush

தற்போது முதலமைச்சராக பதவி வகித்து வரும் நடிகர் விஜய், அரசியலில் நுழைந்து, சந்தித்த முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றியை தனதாக்கினார்.

மேலும், அவர் அரசியலில் வென்ற பிறகு மற்ற பல நடிகர்களும் அரசியல் கனவு காண ஆரம்பித்திருக்கிறார்கள்.

ராகவா லாரன்ஸ், விஷால், தனுஷ் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

“எனக்கு விஜய் பார்த்து பொறாமை இல்லை, நான் வந்திருந்தால் நிச்சயம் முதலமைச்சர் ஆகி இருப்பேன்” என ரஜினியும் பேட்டி கொடுத்தார்.

இவ்வாறு இருக்கையில், விஜய் எப்படி தனது ரசிகர் மன்றத்தை முதலில் பலப்படுத்தி அதற்குப் பிறகு அரசியல் கட்சியாக மாற்றினாரோ அதே பாணியினை தற்போது தனுஷ் பின்பற்ற தொடங்கி இருக்கிறார்.

தன்னுடைய ரசிகர் மன்றத்தை பலப்படுத்தும் விதமாக அதில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தும் படி நிர்வாகிகளுக்கு தெரிவித்திருக்கிறாராம் தனுஷ்.

இதற்காக, தமிழ் நாடு முழுவதும் 40 மாவட்டங்களாக பிரித்து ரசிகர் மன்றங்களில் தலைவர்களையும் இதற்காக நியமித்திருக்கிறார் தனுஷ்.

அரசியலில் நுழைய இப்போதே தனுஷ் பணிகளை தொடங்கி விட்டதால், 2031 தேர்தலில் அவர் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகம் கிளம்பியிருக்கிறது.

Exit mobile version