வெளியானது ‘ஒன்ஸ் மோர்’ வெளியீட்டு திகதி.

ஒன்ஸ் மோர்

விஜய், சிம்ரன், சிவாஜி, சரோஜா தேவி நடிப்பில் உருவாகி 1997-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஒன்ஸ் மோர்’. இப்படத்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கியிருந்தார்.

தற்போது, இதே ‘ஒன்ஸ் மோர்’ என்ற தலைப்பில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. ஆம், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும், இசையமைப்பாளர் ஹிஷாம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து இதுவரை வெளிவந்த ‘வா கண்ணம்மா’ மற்றும் ‘இதயம்’ ஆகிய இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், ஆகஸ்ட் 28-ஆம் தேதி ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படம் வெளியாகிறது என்பதை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Exit mobile version