சமீபத்தில் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்ட தயாரிப்பாளர் ரவீந்தர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அவ்வப்போது அப்டேட் தெரிவித்துவரும் டுவிட்டர் பயனாளி ஒருவர் இதுகுறித்து புகைப்படங்களுடன் தகவல்கள் வெளியிட்டுள்ள நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனின்போதும் காரசாரமாக விமர்சனம் செய்தவர் ரவீந்தரன் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது அவரே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றால் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது என்று கூறப்படுகிறது.
#Biggboss6
Leave a comment