BiggBossTamilகாணொலிகள்

வெளிய போனதும் BP செக் பண்ணுங்கோ – அசீமை கலாய்த்த ஜனனி!

Share
Share

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான அசீம், கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களிடமும் சண்டை போட்டு விட்டார் என்பதும், தான் சொல்ல வேண்டிய கருத்தை ஆவேசமாக கூறிவிட்டு எதிராளியின் கருத்தை காது கொடுத்துக் கேட்கவே மாட்டார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது உள்ளது.

இந்த நிலையில் ஜனனி இடம் விக்ரமன் அசீம் குறித்து பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த அசீம், ‘என்னைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள் என்று ஆவேசமாக விக்ரமினுடன் சண்டை போடுகிறார். நான் என்ன பேசினேன் என்பதை சொல்கிறேன் என விக்ரமன் விளக்கமளிக்க முன் வந்தாலும் கூட அதை கேட்க மறுக்கும் அசீம், ’உங்களுடைய மாயாஜால வார்த்தைகளை எல்லாம் என்னிடம் வைத்துக்கொள்ள வேண்டாம். இந்த ஜீபூம்பா வேலையை வேறு யாரிடமாவது வைத்து கொள்ளுங்கள்’ என்று கூறுகிறார்.

விக்ரமன் அவருக்கு பொறுமையாக விளக்கம் அளிக்க முன்வந்த போதிலும் அந்த விளக்கத்தை ஏற்க அசீம் மறுக்கும் நிலையில் ஜனனி அசீமை சமாதானப்படுத்த முயல்கிறார். ‘நாங்கள் என்ன சொல்ல வருகிறோம் என்பதை கேட்டுவிட்டு பதில் சொல்லுங்கள்’ என்று ஜனனி கூறியபோது அவரிடமும் அவர் சொல்வதை கேட்காத அசீம், தான் சொல்வதை திரும்ப திரும்ப சொல்லி வருகிறார்.

இதனால் ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன ஜனனி ‘உங்களுக்கு BP இருக்கா என்று ரவுண்டு கட்டி கேட்க, அப்போது அசீம், ‘எனக்கு BP எல்லாம் இல்லை, ஆனால் நீங்கள் தான் என்னை BPயை உயர்த்த பார்க்கின்றீர்கள் என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்கிறார்.

#BiggBoss

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
Untitled 1 45 scaled
BiggBossTamilசினிமாபொழுதுபோக்கு

பிக்பாஸ் சீசன் 7 – விஜய் டிவியின் பிரபலங்கள் எல்லாம் போட்டியாளர்களா?

குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சி முடிவுக்கு வருவதையொட்டு அடுத்த நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் வர...

8
BiggBossTamilசினிமாசினிமாபொழுதுபோக்கு

ஆரம்பமாகவுள்ள பிக்பாஸ் சீசன் 7!! எப்போது தெரியுமா?

ஆரம்பமாகவுள்ள பிக்பாஸ் சீசன் 7!! எப்போது தெரியுமா? சின்னத்திரை ஒவ்வொன்றிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக பல...

Untitled
காணொலிகள்சினிமாசினிமாபொழுதுபோக்கு

இணையத்தை கலக்கும் வாரிசு ‘ஜிமிக்கி பொண்ணு’

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘வாரிசு’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா...

dhana 1
BiggBossTamil

பிக்பாஸ் – சீக்ரெட் ரூமில் தனலட்சுமி!!

பிக்பாஸ் நிகழ்ச்சி 80வது நாளை நெருங்கி வரும் நிலையில் வீட்டிற்குள் இருக்கும் 9 போட்டியாளர்கள் மத்தியில்...