டி20 உலகக் கோப்பையில் அயர்லாந்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே அணி!

ar61u0co richard

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், முதல் சுற்று 4வது லீக் ஆட்டம் இன்று ஹோபார்ட் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் மோதின.

டாஸ் வென்ற அயர்லாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்தது.

பின்னர் விளையாடிய அயர்லாந்து அணி ஆரம்பம் முதலே ஜிம்பாப்வே பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. பாரி மெக்கார்த்தி 22 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார். இதையடுத்து ஜிம்பாப்வே அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

#Zimbabwe #Ireland

Exit mobile version