youtube
ஏனையவைகுற்றம்

உயிருக்கு எமனான யூரியூப் ரெசிப்பி! – உருட்டுக் கட்டையால் தாக்கிய கணவன்!!

Share

உயிருக்கு எமனான யூரியூப் ரெசிப்பி! – உருட்டுக் கட்டையால் தாக்கிய கணவன்!!

யூடியூப் ரெசிபியை பார்த்து மோசமான சிக்கன் குழம்பு வைத்த மனைவியை உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்து சடலத்தை ஏரியில் வீசிவிட்டு, தனது மனைவி மாயமானதாக நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூர் சோழதேவனஹள்ளி தரபனஹள்ளியை சேர்ந்தவர் முபாரக். இவரது மனைவி ஷெரீன் பானு. கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்த நிலையில் கடந்த 5ஆம் திகதி ஷெரீன் பானு மாயமானதாக கூறப்படுகின்றது. ஆனால் ஷெரீன் பானு பெற்றோரிடம் முபாரக் எந்த ஒரு தகவலும் கொடுக்காமல் இருந்ததார் என கூறப்படுகின்றது.

இந்த நிலையில் முபாரக் மீது சந்தேகம் அடைந்த ஷெரீன் பானுவின் பெற்றோர் சோழதேவனஹள்ளி பொலிஸில் புகார் அளித்தனர். பொலிஸார் வழக்குப்பதிவு செய்து முபாரக்கை பிடித்து விசாரிக்க முயன்ற நிலையில் அவர் தலைமறைவாகி விட்டார்.

அவரை பொலிஸார் வலை வீசி தேடி வந்த நிலையில், தனது வழக்கறிஞருடன் சோழதேவனஹள்ளி பொலிஸ் நிலையத்தில்ன் சரண் அடைந்த கணவர் முபாரக், தனது மனைவியை கொலை செய்துவிட்டதாக பொலிஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

முபாரக் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு மனைவியுடன் பெங்களூருக்கு வந்து வியாபாரம் செய்து வந்துள்ளார். மனைவியின் சமையல் சரியில்லை என்று முபாரக் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கணவனின் மனதை கவர யூடியூப் வீடியோவெல்லாம் பார்த்து கடந்த 5ஆம் திகதி சிக்கன் குழம்பு சமைத்துக் கொடுத்ததார் என கூறப்படுகின்றது. அப்போதும் சிக்கன் குழம்பு ருசியாக இல்லாததால் ஆத்திரம் அடைந்த முபாரக், மனைவி ஷெரீன் பானுவுடன் சண்டை போட்டுள்ளார்.

இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த முபாரக், வீட்டில் கிடந்த உருட்டு கட்டையால் தாக்கி ஷெரீன் பானுவைத் தாக்கி கொலை செய்துள்ளார், பின்னர் அவரது சடலத்தை ஒரு மூட்டையில் வைத்து கட்டி சிக்கபானவாராவில் உள்ள ஏரியில் வீசியதாக அவர் வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து மனைவியை கொலைசெய்து விட்டு மாயமானதாக நாடகமாடிய கணவன் முபாரக்கை கைதுசெய்த பொலிஸார், சிக்கபானவாரா ஏரியில் வீசப்பட்ட ஷெரீன் பானுவின் சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 69035b0d8bf92
இலங்கைஏனையவைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை விதிப்பு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக...

Weligama Chairman shooting
ஏனையவை

லசா கொலையில் புதுத் திருப்பம்: உடந்தையாக இருந்தது நெருங்கிய நண்பரே என அதிர்ச்சி தகவல்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலையில் துப்பாக்கிதாரிக்கு உதவிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்,...

25 69020810f343e
ஏனையவை

கல்கிசை நீதிமன்று: அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்த சிறைக்கைதியின் செயல்.

நீதிமன்றத்தின் வேண்டுகோளின் பேரில் இன்று (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தின் களஞ்சிய அறையை சுத்தம் செய்ய...