tamilnaadi 4 scaled
ஏனையவை

இன்றைய ராசிபலன் : 13 நவம்பர் 2024 – Daily Horoscope

Share

இன்றைய ராசிபலன் : 13 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 13.11.2024, குரோதி வருடம் ஐப்பசி 27, புதன் கிழமை, சந்திரன் மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்மம் ராசியில் உள்ள மகம், பூரம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மங்களகரமான நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையிலிருந்து வேலைகளை முடித்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். வேலை தொடர்பாக குறுகிய தூர பயணம் செல்ல வேண்டியது இருக்கும். தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். இன்று வேலை தொடர்பாக சில சலுகைகள் பெறலாம். உங்களின் சம்பளம், பதவி உயர உள்ளது. பிள்ளைகளிடம் இருந்து சிலர் நல்ல செய்திகளை கிடைக்கும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று சமூக நிகழ்ச்சிகளுக்கு நல்ல நாளாக இருக்கும். உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் கௌரவம் அதிகரிக்கும். அரசாங்கத்தால் கௌரவிக்கப்படலாம். ஆன்மீக பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இது உங்களின் மன அமைதி அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் துணையின் ஆதரவை தெரிவிப்பார்கள்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று பரபரப்பான நாளாக இருக்கும். பணியிடத்தில் சில மாற்றங்களை செய்வதல் மூலம் சிறப்பான பலனை பெறுவீர்கள். இல்லற வாழ்க்கையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும், இணக்கத்துடன் செயல்படுவீர்கள். திருமணத்தில் இருந்த தடைகள் நீங்கும். நண்பர்களின் உதவியால் சில முக்கிய வேலைகள் முடிக்க முடியும். மாணவர்கள் படிப்பில் விருப்பம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவு கிடைக்கும்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வீடு, வாகனம் அல்லது சொத்து வாங்கும் விஷயத்தில் முன்னேற்றம் இருக்கும். சில நீதிமன்றம் தொடர்பான வழக்குகள் ஏற்படும். சுற்றுலா செல்ல திட்டமிடுபவர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். வாகனம் பழுது தொடர்பாக பணம் செலவாகும். குடும்பத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் நீண்ட காலமாக தடைப்பட்டுள்ள வேலை செய்து முடிக்க முடியும். வண்டி, வாகன பயன்பாட்டில் கவன குறைவை தவிர்க்கவும். இன்றைய எதிலும் நிதானமாகச் செயல்படவும். தொழில், வியாபாரம் தொடர்பாக எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். குடும்ப பிரச்சனைகள் தீர்க்க சிறிது நேரம் ஒதுக்குவீர்கள். இன்று சில முக்கிய வேலைகளை முடிக்க தாமதம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் மன உளைச்சல் ஏற்படும். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். குடும்பத்தில் உள்ள சிலரின் சுகவீனத்தால் அலைச்சல் ஏற்படும்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மன அமைதி கிடைக்கும். பெற்றோர்கள் உடல் நலம் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. உங்களின் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். மனத்திருப்தி கிடைக்கக்கூடிய நாள். மாணவர்கள் தேர்வு தொடர்பான விஷயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள். இன்று வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று வெற்றி அதிகரிக்க கூடிய நாள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் வேலை தொடர்பாக ஊழியர்களின் ஆலோசனை உங்களுக்கு உதவும். உங்கள் பிள்ளைகள் தொடர்பான புதிய முதலீடுகள் செய்ய நினைப்பீர்கள். புதிய சொத்து, வாகனம் வாங்கும் முயற்சிக்க சாதகமான நாள்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று நிதிநிலை சிறப்பாக இருக்கும். இன்று கடன் தொல்லையிலிருந்து விடுவீர்கள். பெரிய அளவில் முன்னேற்றம் கிடைக்கக்கூடிய நாள். குடும்ப பொறுப்பு தொடர்பாக உங்களின் சுமைகள் சற்று குறையும். பண முதலீடு தொடர்பான விஷயத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று குடும்பத்தில் சில முக்கிய விஷயங்களுக்கு குறித்து மனைவியுடன் கலந்து ஆலோசிப்பீர்கள். பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று புத்திசாலித்தனம், விவேகத்துடனும் பணியாற்ற வேண்டிய நாள். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான நாள். உங்களின் நிதிநிலை பலப்படும். குடும்ப வாழ்க்கையில் பதற்றம் தீரும். திருமண முயற்சி தொடர்பான விஷயத்தில் சிலரிடம் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். இன்று பெற்றோரின் ஆசீர்வாதத்தால் எந்த வேலையிலும் நிச்சயமாக வெற்றி கிடைக்கும்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கலவையான பலன்களை கிடைக்கக்கூடிய நாள். தனிப்பட்ட வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றத்தை கண்டு மகிழ்வீர்கள். இன்று உங்கள் வேலையை முடிப்பதில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். அரசாங்க வேலை தொடர்பாக சற்று அலைச்சல் ஏற்படும். படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்க கூடிய நாள். பல வருமான ஆதாரங்கள் பெறுவீர்கள். பணம் முதலீடு தொடர்பான முன்னேற்றம் ஏற்படும். அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனை மூலம் பங்குச் சந்தை முதலீடு செய்வது நல்லது. இன்று அரசியல் தொடர்பான நபர்களுக்கு சில புதிய பொறுப்புகள், ஆதரவு கிடைக்கும். பணம் தொடர்பான விஷயத்தில் கவனமாக செலுத்துவது நல்லது.

Share
தொடர்புடையது
UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...

26 6960cb1db7fc8
ஏனையவை

கிரீன்லாந்து விவகாரம்: நேட்டோவின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் நகர்வு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை இணைப்பதில் காட்டி வரும் தீவிரம், இரண்டாம் உலகப் போருக்குப்...