Rasi Palan new cmp 2 scaled
ஏனையவை

இன்றைய ராசி பலன் – 03.05.2024 : Horoscope Today, 03 May

Share

இன்றைய ராசி பலன் – 03.05.2024 : Horoscope Today, 03 May

இன்றைய ராசிபலன் மே 3, 2024, குரோதி வருடம் சித்திரை 20 வெள்ளிக் கிழமை, சந்திரன் கும்பம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம்ராசியில் உள்ள திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று பலவீனமான நாளாக இருக்கும். உங்களின் பழைய திட்டங்களில் நல்ல லாபம் கிடைக்கும். அன்றாட செலவுகளை எளிதாக சமாளிக்கும் வகையில் உங்களின் வருமானம் உயரும். உங்களின் திறமையை நிரூபிக்க முடியும். பணியிடத்தில் வேலைகளை சிறப்பாக முடித்து மகிழ்ச்சியடைவீர்கள். இன்று உங்களின் கௌரவம் அதிகரிக்கும். கூட்டு வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும்.
​குரு பெயர்ச்சி 2024 : ஒரு வார்த்தையில் உங்கள் பலனை தெரிந்து கொள்ளுங்கள்

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முக்கியமான பணிகளில் சரியாக திட்டமிட்டு செயல்படுவது அவசியம். உடல்நல பிரச்சினைகளில் கவனம் தேவை. இன்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவதில் கவனம் தேவை.இன்று மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்கும். எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. பணியிடத்தில் வேலையில் சிறப்பாக செயல்படுவீர்கள்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு முக்கியமான நாளாக இருக்கும். ஆசையும் சொத்து, அசைய சொத்து வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன் கவனமாக முடிவுகளை எடுக்கவும். குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் மகிழ்ச்சியை தரும். என்ற குடும்பத்தில் உங்களின் மரியாதையை நிலை நாட்டுவார்கள். உங்கள் இலக்கில் கவனம் செலுத்தி முன்னேற வேண்டிய நாள். உங்களின் தலைமைத்துவம் நிரூபிக்க முடியும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று கடின உழைப்பு நற்பலனை தரக்கூடிய நாளாக இருக்கும். இன்று கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். அரசு பணியில் ஈடுபட்டுள்ள அவர்கள் மாற்றுவதற்கு ஈடுபடுவதை தவிர்க்க வேண்டிய நாள். தொழில் சம்பந்தமான முடிவுகளில் கவனம் செலுத்தவும். நிதி விஷயங்களில் வெளி ஆட்களிடம் ஆலோசனை பெற வேண்டாம். மாணவர்களின் கடின உழைப்புக்கு ஏற்ற நற்பலனை பெறுவீர்கள். இன்று புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு இனிமையான பலன் தரக்கூடிய நாள். பணியிடத்தில் உங்களுக்கான சலுகைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்வீர்கள். இன்று யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதை தவிர்க்கவும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள எந்த ஒரு வேலையும் முடிவடையும். உங்கள் முயற்சிகளுக்கு நல்ல வெற்றியும், சக ஊழியர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். தாய் வழி சொந்தங்களின் நல்ல ஆதரவு கிடைக்கும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று வசதிகள் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கும் ஆசை நிறைவேறும். இன்று பிறரின் நலனில் அக்கறை செலுத்துகிறீர்கள். முக்கிய பணிகளை முடிப்பதில் அவசரப்பட வேண்டியது இருக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். குழந்தைகள் தொடர்பான விஷயத்தில் அக்கறையுடன் செயல்படுவீர்கள். மாணவர்கள் கல்வியில் இருந்த பிரச்சனைகள் தீரும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் தைரியம் அதிகரிக்க கூடிய நாள். சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உங்களுக்கு பெரிய பதவி, பாராட்டு கிடைக்கும். இன்று யாரிடமும் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். அரசு தொடர்பான திட்டங்களின் மூலம் நல்ல லாபம் பெறுவீர்கள். உறவினர்களிடமிருந்து சில நல்ல செய்திகளை கேட்பீர்கள். சொந்த வேலையை விட மற்றவர்களின் வேலையில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான பலன் கிடைக்கக்கூடிய நாள். குடும்ப உறுப்பினர்களின் திருமணம் முயற்சிகளில் நல்ல செய்தி கேட்பீர்கள். இன்று உங்களின் சூழலில் இனிமையானதாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். இன்று உங்களின் நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்க வாய்ப்புள்ளது, வெளி ஆட்களின் ஆதரவு பெறுவீர்கள். உங்கள் வேலையில் முழு நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும். இன்று நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி வெற்றி பெறுவீர்கள். உங்களின் தனித்துவமான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். இன்று உங்களின் பேச்சு, நடத்தையில் இனிமையை கடைப்பிடிப்பது அவசியம். உங்களின் பழைய திட்டங்கள் மூலம் நல்ல லாபத்தை பெறலாம்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு முக்கியமான நாளாக அமையும்.. தொண்டு வேலைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று உயரக்கூடிய உங்களின் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். கடந்த கால அனுபவங்களை இன்று பயன்படுத்தி வேலைகளில் வெற்றி பெற முடியும். தொழில் நிமித்தமாக பயணங்கள் செல்ல நேரிடும். இன்று அவசரமாக எந்த ஒரு வேலையும் அல்லது முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். பணியிடத்தில் சில புதிய ஆதாரங்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். உங்களின் வருமானம் அதிகரிக்கும். நீண்ட காலமாக இல்லற வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி, மகிழ்ச்சியாக இருக்கும். இன்று உங்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அரசு தொடர்பான காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிடலாம்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று வருமானத்திற்கும், செலவுக்கு இடையே மாட்டிக் கொள்வீர்கள். பணியிடத்தில் உங்கள் வேலையில் சில தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். இன்று உங்கள் வேலைகளை கண்ணும் கருத்துமாக செய்து முடிப்பது அவசியம். தாய் வழி உறவுகளின் மூலம் நிதி நன்மைகளை பெறுவீர்கள். இன்று யாரிடமும் கடன் வாங்குவது, கொடுப்பதை தவிர்ப்பது அவசியம். மாணவர்கள் படிப்பில் நல்ல உயரத்தை எட்ட முடியும்.

Share
தொடர்புடையது
ஏனையவை

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт Меня зовут...

ஏனையவை

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir?

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir? Pinco...

ஏனையவை

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir?

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir? Pinco...

ஏனையவை

Top Funkce Aplikace Mostbet, Které Byste Měli Znát

Top Funkce Aplikace Mostbet, Které Byste Měli Znát Aplikace Mostbet se stává...