face
ஏனையவை

சரும நிறத்தை அதிகரிக்க – பால் பவுடர் பேஸ் பேக்

Share

பால் பவுடருடன் சிறிது எலுமிச்சை அல்லது ஆரஞ்சு சாறு சேர்த்து பல்வேறு விதமான பேஷியலை முயற்சி செய்யுங்கள். அது வளமான பொலிவை நமது முகத்திற்கு கொடுக்கும். பாலை விடவும் இது சிறந்தது.

ஏனெனில் பாலை விட பால் பவுடரில் சில ஊட்டச்சத்துக்களின் காம்பவுண்ட்டுகள் சேர்க்கப்பட்டிருக்கும். அது சருமத்தை மென்மைப்படுத்த உதவும்.

எண்ணெய் பசையான சருமம் உள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு மிகவும் ஏற்ற முறை இதுதான். சருமத்தில் உள்ள எண்ணெய் பசை அதனால் உருவாகும் பருக்கள் ஆகியவற்றைக் குறைத்து சருமத்தின் நிறத்தைக் கூட்டும்.

ஒரு ஸ்பூன் பால் பவுடருடன் ஃபிரஷ்ஷாக எடுத்த எலுமிச்சை சாறினை இரண்டு ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அந்த கலவையை முகத்தை நன்கு கழுவி விட்டு முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் இடைவெளி இல்லாமல் நன்கு அப்ளை செய்து உலர விடுங்கள்.

நன்கு உலர்ந்தபின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். வாரம் ஒரு முறை இந்த முறையைப் பயன்படுத்திப் பாருங்கள். சிறந்த ரிசல்ட்டை பெற்றிருப்பதை உணர்வீர்கள்.

ஒரு டேபிள் ஸ்பூன் பால் பவுடருடன் சில துளிகள் குங்குமப்பூவைச் சேர்த்து அதனுடன் பேஸ்ட் செய்வதற்கான சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பேஸ்ட்டாக்கிக் கொள்ள வேண்டும். அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்து அதை அப்படியே அரை மணி நேரம் உலர விடுங்கள். அதன் பின்னர் குளிர்ந்த நீரால் நன்கு கழுவி விடுங்கள்.

தேவையான பொருட்கள்

பால்பவுடர் – 1 ஸ்பூன்

அரிசி மாவு – 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

ரோஸ் வாட்டர் – 1

அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். முகத்தை சுத்தமான தண்ணீரால் கழுவிய பின்னர் இந்த பேக்கை உங்களுடைய முகம் கழுத்து எல்லா இடங்களிலும் நன்றாக அப்ளை செய்து 20 நிமிடங்கள் அப்படியே விட்ட பின்னர் முகத்தை தண்ணீரில் லேசாக தேய்த்து கழுவுக் கொள்ளவும்.

நீங்களே எதிர்பாராத வகையில் முகம் பொழிவு பெற்றிருக்கும். வாரத்தில் மூன்று நாட்கள் அதாவது ஒரு நாள் விட்டு, ஒரு நாள், இந்த ஃபேஸ் பேக்கை போட்டு வரும் போது உங்களுடைய சருமத்தின் நிறம் கூடிக்கொண்டே இருக்கும்.

#BeautyTips

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 69035b0d8bf92
இலங்கைஏனையவைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை விதிப்பு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக...

Weligama Chairman shooting
ஏனையவை

லசா கொலையில் புதுத் திருப்பம்: உடந்தையாக இருந்தது நெருங்கிய நண்பரே என அதிர்ச்சி தகவல்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலையில் துப்பாக்கிதாரிக்கு உதவிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்,...

25 69020810f343e
ஏனையவை

கல்கிசை நீதிமன்று: அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்த சிறைக்கைதியின் செயல்.

நீதிமன்றத்தின் வேண்டுகோளின் பேரில் இன்று (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தின் களஞ்சிய அறையை சுத்தம் செய்ய...

25 6852cf07dcfea
ஏனையவை

தேங்காய் விலை தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் சரிவு: இடைத்தரகர்களால் சந்தை விலை உயர்வு என குற்றச்சாட்டு

நாட்டில் வாராந்திர ஏலத்தில் தேங்காயின் சராசரி விலைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் 5 சதவீதம் சரிந்துள்ளதாக...