mw
ஏனையவை

“தனிமையை காதலிக்கிறேன்” – தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட பிரபல மொடல்!

Share

பிரேசில் நாட்டைச் சேர்ந்த அழகி ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மணமுறிவு காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.இந்த அதிசய முடிவு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த மொடல் அழகியின் திருமணம் (வயது-33) பிரேசிலின் பிரபல கத்தோலிக்க தேவாலயத்தில் இடம்பெற்றுள்ளது. திருமணத்தில் அவரது பெற்றோர். நண்பர்கள் உள்ளிட்ட பலர் பங்குபற்றியுள்ளனர்.

தனது இந்த திருமண முடிவு குறித்து மொடல் அழகி கிரிஸ் கேலரா தெரிவிக்கையில்,
“எனது சொந்த வாழ்க்கையில் நான் முகம்கொடுத்த பல்வேறு பிரச்சினைகள் என்னை இந்த முடிவுக்கு தூண்டின. இதனால் தனிமையில் வாழ்வது சிறந்த உணர்வு என்று புரிந்துகொண்டேன். இதனை கொண்டாடும் வகையில் என்னை நானே திருமணம் செய்துள்ளேன்.” – என்றுள்ளார்.

இந்த வினோத திருமணங்கள் பலரால் அதிசயிக்கப்பட்டு பார்க்கப்பட்டாலும், வேறு பலரால் விமர்சிக்கப்பட்டும் வருகின்றன. எனினும் உலகில் அண்மைக்காலமாக இவ்வாறான வினோத திருமணங்கள் அதிகரித்துள்ளன.

செக்ஸ் பொம்மையை திருமணம் செய்துகொண்ட பாடிபில்டர், ஒரு ஆண் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்வது, ஒரு பெண் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்வது போன்ற வினோத திருமணங்கள் அண்மையில் இடம்பெற்றிருந்தன. அந்த வகையில், தற்போது இந்த வினோத பட்டியலில் பிரேசில் பிரபல மொடல் அழகி கிரிஸ் கேலராவும் இணைந்துள்ளார்.

mo mod

model

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ஏனையவை

“ஹீரோக்களுக்காக மட்டுமே சினிமா”: நடிகை ராதிகா ஆப்தேவின் அதிர்ச்சிக் கருத்து!

Rajinikanth Radhika Apte Actress இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ராதிகா ஆப்தே, தான்...

download
ஏனையவை

தோட்டத் தொழிலாளர்கள் தீபாவளி ஏமாற்றம்: நாளாந்த வேதனம் குறித்து வடிவேல் சுரேஷ் கருத்து

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ், இந்த முறை தீபாவளிக்கு...

ஏனையவை

வெளிநாட்டு வேலைக்குச் செல்வோர் கவனத்திற்கு: சலுகை விலையில் விமான டிக்கெட் வழங்கும் சாளரம் திறப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகப் பயணிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குச் சலுகை விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்குவதற்காக, நாரஹேன்பிட்டையில் உள்ள...

images
ஏனையவைஇந்தியாசெய்திகள்

இந்தியாவில் தயாரான மூன்று இருமல் மருந்துகள் : உலக சுகாதார நிறுவனம் விடுத்த எச்சரிக்கை

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மூன்று இருமல் மருந்துகளில் நச்சுத்தன்மை கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த மருந்துகளை...