குவைத்தில் தூக்கிலிடப்பட்ட இலங்கையருக்கு 3 மனைவிகள்
ஏனையவை

குவைத்தில் தூக்கிலிடப்பட்ட இலங்கையருக்கு 3 மனைவிகள்

Share

குவைத்தில் தூக்கிலிடப்பட்ட இலங்கையருக்கு 3 மனைவிகள்

குவைத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு தூக்கிலிடப்பட்ட இலங்கையர் ஒருவரின் மரண விசாரணை நேற்று நீர்கொழும்பு மாநகரசபை மற்றும் நீர்கொழும்பு வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சிறி ஜயந்த விக்கிரமரத்ன முன்னிலையில் ஆரம்பமானது.

எனினும் உயிரிழந்தவரின் மனைவிகள் என கூறி மூன்று பெண்கள் ஆஜராகியதால் விசாரணை இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.

அநுராதபுரம், கல்கடவல, சூர இசுருகம பகுதியைச் சேர்ந்த வீரசிங்க ஆராச்சிலாகே ஜூட் ரவீந்திர பெரேரா என்ற 46 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் மனைவி எனக் கூறப்படும் குறித்த முகவரியில் வசிக்கும் எஸ்.திஸாநாயக்க முதியன்சேலாகே எஸ்.திஸாநாயக்க என்பவர் சாட்சியமளித்துள்ளார்.

உயிரிழந்தவர் நான் திருமணம் செய்துக் கொண்ட எனது கணவராகும். எங்களுக்கு திருமணமாகி 17 வருடங்கள் ஆகிறது. நான் ஓமானில் வேலை செய்கிறேன். கடற்படையில் சிப்பாயாக பணியாற்றி வந்த அவர், பின்னர் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றார்.

தனது தந்தை குவைத்தில் தூக்கிலிடப்பட்டதை யூடியூப்பில் பார்த்ததாக எனது மகன் என்னிடம் தெரிவித்தார். எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதை அறிந்தவுடன் இலங்கை வந்தேன்.

அவரது உடல் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. அவர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் தண்டனை பெற்று தூக்கிலிடப்பட்டார் என்பதை அறிந்தேன். இறந்த எனது கணவருக்கு வேறு இரண்டு பெண்களுடன் திருமணம் நடந்தது பின்னரே தெரிய வந்தது.

நான் கணவனின் உடலை ஏற்க விரும்பவில்லை. ஆனால், இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

இறந்தவரின் சகோதரர் ஒருவர் சாட்சியம் அளித்ததுடன், சடலத்தை ஏற்றுக்கொள்ள தாய் விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.

இறந்தவரின் மனைவிகள் என கூறப்படும் பெண்களின் அடையாளத்தை சரிபார்த்து, பிள்ளைகளின் தகவல் மற்றும் திருமண சான்றிதழ் மற்றும் பிறப்பு சான்றிதழ்களுடன் இன்று பரிசோதனைக்கு ஆஜர்படுத்துமாறு மரண விசாரணை அதிகாரி சிறி ஜயந்த விக்கிரமரத்ன கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 69035b0d8bf92
இலங்கைஏனையவைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை விதிப்பு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக...

Weligama Chairman shooting
ஏனையவை

லசா கொலையில் புதுத் திருப்பம்: உடந்தையாக இருந்தது நெருங்கிய நண்பரே என அதிர்ச்சி தகவல்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலையில் துப்பாக்கிதாரிக்கு உதவிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்,...

25 69020810f343e
ஏனையவை

கல்கிசை நீதிமன்று: அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்த சிறைக்கைதியின் செயல்.

நீதிமன்றத்தின் வேண்டுகோளின் பேரில் இன்று (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தின் களஞ்சிய அறையை சுத்தம் செய்ய...

25 6852cf07dcfea
ஏனையவை

தேங்காய் விலை தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் சரிவு: இடைத்தரகர்களால் சந்தை விலை உயர்வு என குற்றச்சாட்டு

நாட்டில் வாராந்திர ஏலத்தில் தேங்காயின் சராசரி விலைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் 5 சதவீதம் சரிந்துள்ளதாக...