ஆக்சிஜன் மாஸ்க்கிற்கு பதில் டீ கப்! வெளியான தகவல்!
உலகம்செய்திகள்

ஆக்சிஜன் மாஸ்க்கிற்கு பதில் டீ கப்! வெளியான தகவல்!

Share

ஆக்சிஜன் மாஸ்க்கிற்கு பதில் டீ கப்! வெளியான தகவல்!

அரசு மருத்துவமனையில் பள்ளி சிறுவனுக்கு ஆக்சிஜன் மாஸ்க் பயன்படுத்துவதற்கு பதில் டீ கப் பயன்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலம் தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த பள்ளியில் உள்ள மாணவர் ஒருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே, அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்பு, பள்ளிக்கு வந்த பெற்றோர், அருகிலிருந்த உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு மாணவனை கொண்டு சென்றனர். அங்கு, மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் மூச்சு திணறலை தடுக்க ஆக்சிஜன் மாஸ்க் பொருத்தும்படி கூறினர்.

பின்பு, மாணவனை அங்கிருந்த வார்டில் அனுமதித்தனர். இந்த ஆக்சிஜன் மாஸ்க் பொருத்துவதால் ஒரு துவாரத்தின் வழியே ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்து வரும் ஆக்சிஜனை சுவாசித்து மற்றொரு துவாரத்தின் வழியே கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்ற ஏதுவாக இருக்கும்.

இந்நிலையில், மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்க் இல்லாததால் அருகிலிருந்த கடைக்கு சென்று டீ கப் பயன்படுத்த முடிவு செய்துள்ளார்கள். பின்பு, டீ கப்பில் துளையிட்டு ஒரு துவாரத்தின் வழியே ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்து வரும் டியூபை இணைத்து மாணவனிடம் கொடுத்து மூக்கில் வைத்து பிடித்துக் கொள்ளும்படி கூறியுள்ளார்கள்.

இதனை, அருகில் இருந்த நோயாளி ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். மேலும், அவர் இந்த மாதிரி நடப்பது முதல்முறையல்ல, கடந்த வாரமும் ஒருவருக்கு இப்படி தான் நடந்துள்ளது” என பேசியுள்ளார்.

இந்நிலையில், அரசு மருத்துவமனையில் அலட்சியமாய் இருந்ததற்கு சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆக்சிஜன் மாஸ்கிற்கு பதில் டீ கப் பயன்படுத்தியற்கும் மருத்துவர்கள் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

இந்த விவகாரம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கவனத்திற்கு சென்றதையடுத்து மருத்துவ பணிகள் இயக்குனரிடம் விசாரிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...