7 35
ஏனையவை

தேர்தல் முடிவுக்கு பின்னர் மனோ கணேசன் வெளியிட்டுள்ள கருத்து

Share

தேர்தல் முடிவுக்கு பின்னர் மனோ கணேசன் வெளியிட்டுள்ள கருத்து

நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. வெற்றி பெற்ற அனைவருக்கும் ஆட்சி அமைக்கும் அநுரகுமார திஸாநாயக்க அரசுக்கும் எனது வாழ்த்துக்கள் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் (18) விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாது,

“நாட்டின் தேசிய தீர்மானங்கள் எடுக்கப்படுகின்ற கொழும்பு தலைநகர் மாவட்டத்தில், தமிழர் பிரதிநிதித்துவத்தை இரட்டிப்பு ஆக்க நமது கட்சி எடுத்துக் கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை.

இன்று இருந்த ஒரு தமிழர் பிரதிநிதித்துவமும் இல்லாமல் போய் விட்டது. இதையிட்டு நான் மன வருத்தம் அடைகின்றேன். எனினும், கொழும்பு தலைநகர் மாவட்டத்தில் இருந்த தமது இரண்டு பிரதிநிதித்துவங்களைத் தக்க வைத்து கொண்டு, இன்று அதை மூன்றாகவும் அதிகரித்துக் கொண்ட, சகோதர தமிழ் பேசும் முஸ்லிம் உடன் பிறப்புகளை எண்ணி மகிழ்ச்சி அடைகின்றேன்.

அடித்துள்ள அரசியல் அலையின் மத்தியிலும் மக்கள், எமது வேட்பாளர்கள் போட்டியிட்ட ஏழு மாவட்டங்களில் 2 இலட்சத்து 37 ஆயிரத்து 123 விருப்பு வாக்குகளை எமது வாக்காளர்கள், தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு வழங்கி உள்ளார்கள். அவர்களுக்கு விசேட நன்றிகள். என்றார்.

 

Share
தொடர்புடையது
UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...

26 6960cb1db7fc8
ஏனையவை

கிரீன்லாந்து விவகாரம்: நேட்டோவின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் நகர்வு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை இணைப்பதில் காட்டி வரும் தீவிரம், இரண்டாம் உலகப் போருக்குப்...