2 23
இலங்கைஏனையவைசெய்திகள்

பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பில் வௌியான தகவல்

Share

பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பில் வௌியான தகவல

உயிர் பாதுகாப்புக்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களில் 85 வீதமானவை உரிமம் பெற்றவர்களால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட அனைத்து வகையான துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளையும் அளவு மதிப்பாய்வுக்காக நவம்பர் 21 ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்கத்திடம் மீள ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது.

இருப்பினும், பின்னர் குறித்த திகதி 20224 டிசம்பர் 31 வரை நீடிக்கப்பட்டது. எவரேனும் ஒருவர் தொடர்ந்து துப்பாக்கிகளை வைத்திருக்க விரும்பினால், அதன் அவசியத்தை விளக்கி ஒக்டோபர் 30 ஆம் திகதிக்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சிடம் முறையீடுகளை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த மேன்முறையீடுகளை சமர்ப்பித்த உரிமதாரர்களின் துப்பாக்கிகளை ஆய்வு செய்வதற்கும் மறுபரிசீலனை செய்வதற்கும் துப்பாக்கிகளுடன் தொடர்புடைய ஆவணங்களை பாதுகாப்பு அமைச்சகத்திடம் சமர்ப்பிக்குமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

உயிர் பாதுகாப்புக்காக ஒருவருக்கு ஒரு துப்பாக்கியை மாத்திரம் வழங்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளதுடன், புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையிலேயே துப்பாக்கிகள் வழங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரையில் கையளிக்கப்படாத மற்றும் கணக்காய்வுக்கு சமர்ப்பிக்கப்படாத அனைத்து உரிமம் பெற்ற துப்பாக்கிகளையும் 2025 ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த திகதிக்கு முன்னர் துப்பாக்கிகளை கையளிக்காத உரிமதாரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...