1 8 scaled
ஏனையவை

கூவத்தூர் விவகாரத்தில் திரிஷாவை தொடர்புபடுத்தி அவதூறு பேச்சு! அதிமுக முன்னாள் செயலாளரை கைது செய்ய வேண்டும் – நடிகர் சேரன்

Share

கூவத்தூர் விவகாரத்தில் திரிஷாவை தொடர்புபடுத்தி அவதூறு பேச்சு! அதிமுக முன்னாள் செயலாளரை கைது செய்ய வேண்டும் – நடிகர் சேரன்

அதிமுக கட்சியின் சேலம் ஒன்றிய செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, நடிகை திரிஷா மற்றும் நடிகர் கருணாஸ் ஆகியோர் குறித்து அளித்த பேட்டி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தமிழ்நாடு அரசியலில் கூவத்தூர் ரிசார்ட் விவகாரம் பெரும் புயலை கிளப்பிய சம்பவம் ஆகும். தற்போது இந்த சம்பவம் தொடர்பில் நடிகை திரிஷாவை இணைத்து அதிமுக முன்னாள் பிரமுகர் பேட்டி அளித்துள்ளது சர்ச்சையாகியுள்ளது.

சேலம் ஒன்றிய செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, சேலம் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம், பல கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடாக சொத்து சேர்த்து இருப்பதாக கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்த நிலையில் ஏ.வி.ராஜு பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் ரகசியங்களை அடுக்கினார்.

அவர் எம்.எல்.ஏ. வெங்கடாலசம் குறித்து பேசியபோது நடிகை திரிஷாவை அவர் கேட்டதாகவும், அதற்கு நடிகர் கருணாஸ் ஏற்பாடு செய்ததாகவும் பகிரங்கமாக கூறினார்.

அத்துடன் 25 லட்சம் அதற்காக செலவானதாகவும், எடப்பாடி பழனிசாமி தான இதற்கெல்லாம் பணம் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

இது பெரும் சர்ச்சையாக வெடித்ததைத் தொடர்ந்து நடிகர் சேரன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவதூறு பரப்பும் ஏ.வி.ராஜுவை கைது செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...