ஏனையவை

நியூசிலாந்தை வீழ்த்திய இலங்கை அணி

27
Share

நியூசிலாந்தை வீழ்த்திய இலங்கை அணி

இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி20 போட்டியில் இலங்கை அணி 07 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் குசல் பெரேரா அதிகபட்சமாக 101 ஓட்டங்களையும், அணியின் தலைவர் சரித் அசலங்க 46 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் மாட் ஹென்றி, ஜேக்கப் டஃபி, ஜகாரி ஃபோல்க்ஸ், மிட்செல் சான்ட்னர் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் தலா 01 விக்கெட்டினை வீழ்த்தியுள்ளனர்.

இதன்படி 219 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 211 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பில் ரச்சின் ரவீந்திரா அதிகபட்சமாக 69 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் சரித் அசலங்க 03 விக்கெட்டுகளையும், வனிந்து ஹசரங்க 02 விக்கெட்டுகளையும், நுவன் துஷாரா, மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் தலா 01 விக்கெட்டினை வீழ்த்தியுள்ளனர். எனினும் 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரை நியூசிலாந்து அணி 2 – 1 என்ற அடிப்படையில் ஏற்கனவே கைப்பற்றியமை குறிப்பிட்டதக்கது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

நெல்சனில் அமைந்துள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக குசல் பெரேரா 46 பந்துகளில் 101 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

அணித் தலைவர் சரித் அசலங்க 24 பந்துகளை எதிர்கொண்டு 46 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இதேநேரம் குசல் மெண்டிஸ் 22 ஓட்டங்களையும் ,அவிஸ்க பெர்னாண்டோ 17 ஓட்டங்களையும் ,பெத்தும் நிஸ்ஸங்க 14 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

219 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாடவுள்ளது

Share
Related Articles
17 7
ஏனையவை

ஆபரேஷன் சிந்தூர்: கணவனை இழந்த பெண்ணின் உருக்கமான வார்த்தைகள்

பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த பெண்ணொருவர், ஆபரேஷன் சிந்தூருக்காக இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்....

2 17
ஏனையவை

முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளையும் தன்வசமாக்கிய தமிழரசுக் கட்சி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

30
இலங்கைஏனையவைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக...