24 65bb8d94db240
உலகம்ஏனையவைசெய்திகள்

விமான போக்குவரத்து பாதையில் புதிய மாற்றம்: சீனாவை எச்சரித்த தைவான்

Share

விமான போக்குவரத்து பாதையில் புதிய மாற்றம்: சீனாவை எச்சரித்த தைவான்

சீனா விமான போக்குவரத்து பாதையை மாற்றியதற்கு தைவான் கடுமையான எதிர்ப்பை முன்வைத்துள்ளது.

சீனா சமீபத்தில் தங்களுடைய விமான பாதையில் சிறிது மாற்றத்தை அறிவித்தது, அதன்படி தெற்கு நோக்கி செல்லும் விமானங்கள் M503 பாதையில் பிப்ரவரி 1ம் திகதி முதல் பயணிக்கும் என அறிவித்தது.

மேலும் இந்த மாற்றத்தின் மூலம் பரபரப்பான இடங்களுக்கான விமான போக்குவரத்து செயல்திறன் அதிகரிக்கும் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனா-தைவான் இடையே ஏற்கனவே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சீனாவின் இந்த விமான போக்குவரத்து மாற்றம் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விமான போக்குவரத்தை பாதையை மாற்றும் சீனாவின் அறிவிப்புக்கு தைவான் புதன்கிழமை எச்சரிக்கை தெரிவித்துள்ளது. தைவான் இராணுவ அமைச்சர் தெரிவித்த கருத்தில், இந்த மாற்றம் ஒருதலைபட்சமானது மற்றும் தன்னிச்சையானது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவை இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை அதிகரிக்கும் என்றும் உடனடியாக இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தைவான் போக்குவரத்து அமைச்சர் Wang Kwo-tsai  தெரிவித்த தகவலில், சீனா அறிவித்துள்ள விமான பாதையானது தைவான் விமானங்களின் தகவல் பகுதிக்கு மிக அருகில் உள்ளது என்றும், இரண்டுக்கும் இடையே வெறும் 4.2 கடல் மைல்கள் மட்டுமே இடைவெளி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 109
செய்திகள்இலங்கை

புத்தாண்டு பயணம்: 1,500 கூடுதல் பேருந்துகள் மற்றும் விசேட இரயில் சேவைகள் தீவிரம்!

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யும் பொதுமக்களின் வசதிக்காக, விசேட...

world 108
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு விசேட எரிபொருள் ஒதுக்கீடு: அரசாங்கத்தின் புதிய திட்டம் குறித்து அறிவிப்பு!

இலங்கையிலுள்ள பெரிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிலதிபர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் செயல்பாடுகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக...

world 107
செய்திகள்உலகம்

ஈரான் பேச்சுவார்த்தை முறிவு: கவலையின்றி UFC சண்டையைக் கண்டுகளித்த டொனால்ட் டிரம்ப்!

மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்காக ஈரானுடன் இஸ்லாமாபாத்தில் நடத்தப்பட்ட மிக முக்கியமான அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித...

world 106
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையிலிருந்து வெலிசராவுக்கு மாற்றப்பட்ட 7 முக்கிய பாதாள உலகக் கும்பல் தலைவர்கள்!

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களைச் சேர்ந்த ஏழு முக்கிய தலைவர்கள், பூசா உயர் பாதுகாப்புச் சிறையிலிருந்து...