6 13
ஏனையவைஇலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு மாவட்ட முதலாவது கடற்றொழி்ல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Share

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான முதலாவது கடற்றொழி்ல் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையிலும் நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதன் மற்றும் ரவிகரன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது

குறித்த கூட்டமானது நேற்றுமுன்தினம்(25) பிற்பகல் 3 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இனங்கண்டு அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதே இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் பல படகுகள் மின் விளக்கினை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுவதனால் பல ஆயிரம் கிலோவில் மீன்களை பிடிக்கின்றார்கள்.

இதனால் சாதாரண கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர் ஆகியோர் பிரதி அமைச்சரிடம் தெரிவித்தனர்.

இதற்கு விசேட செயலணியை உருவாக்கி நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், அமைச்சின் மேலதிக செயலாளர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), கடற்றொழில் அமைச்சின் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், கடலோரப் பாதுகாப்பு திணைக்களம், பொலிஸார், கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Share
தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...