விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை விட ராஜபக்ஸக்களும் அவர்களது சகாக்களும் நாட்டிற்குத் தீங்கிழைத்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
‘துறைசார் நிபுணர்களையும், திறமையானவர்களையும் அமைச்சுக்களின் செயலாளர்களாகவும், அரச நிறுவனங்களின் தலைவர்களாகவும் நியமிக்க முடியாத நிலையில் ஜனாதிபதி உள்ளார்.
நாடு தற்போது எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்கு முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பயனற்ற அபிவிருத்தி திட்டங்கள் மூல காரணியாக காணப்படுகிறது.
இந் நிலையில் நாடு எதிர்க்கொண்டுள்ள நிலைமைக்கு ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் உட்பட ராஜபக்ஷ குடும்பமே பொறுப்புக் கூற வேண்டும்.
வருமானத்தை ஈட்டித்தராத அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம், அதிவேக நெடுஞ்சாலை, விளையாட்டு மைதானம், தாமரைத் தடாக அரங்கம் உள்ளிட்ட அபிவிருத்தி திட்டங்கள் நாட்டுக்கு எவ்வித இலாபத்தையும் பெற்றுக் கொடுக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SrilankaNews
Leave a comment