” லிற்றோ நிறுவன அதிகாரிகளை நாடாளுமன்றத்துக்கு அழைத்து உடன் விசாரணைகளை ஆரம்பியுங்கள்.”
இவ்வாறு கோப்குழுவின் தலைவருக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பணிப்புரை விடுத்தார்.
” சமையல் எரிவாயு கப்பல் துறைமுகம் வந்தும், நேற்றிரவு 8 மணிவரை, விநியோக நடவடிக்கை இடம்பெறவில்லை. இரவு, பகலாக பணியாற்ற வேண்டிய நேரத்தில் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டுள்ளனர்.
எனவே, கால தாமதம் குறித்து லிற்றோ நிறுவன அதிகாரிகளை அழைத்து விசாரிக்கவும்.” – என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
#SriLankaNews
Leave a comment