3 scaled
ஏனையவை

ரூ.40 ஆயிரத்துக்கு பதில் 4 லட்சத்தை அனுப்பிய கோயம்புத்தூர் முதலாளி! தப்பி ஓடிய வட மாநில தொழிலாளர்கள்

Share

ரூ.40 ஆயிரத்துக்கு பதில் 4 லட்சத்தை அனுப்பிய கோயம்புத்தூர் முதலாளி! தப்பி ஓடிய வட மாநில தொழிலாளர்கள்

40 ஆயிரம் ரூபாய் சம்பள பணத்திற்கு பதில் 4.6 லட்சத்தை முதலாளி மாற்றி அனுப்பியவுடன், பணத்துடன் தொழிலாளர்கள் தப்பியுள்ளனர்.

தமிழக மாவட்டமான கோயம்புத்தூர், கணபதி பகுதியில் பாஸ்கரன் என்பவர் கட்டுமான அலுவலகம் வைத்திருக்கிறார். இவரிடம், உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சிவம் நாயக், பிரபாகரன் நாயக் ஆகிய இவர்கள் 4 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அவர்களுக்கு சம்பள பணத்தை பாஸ்கரன் அனுப்பியிருக்கிறார். அப்போது, சம்பள பணமான ரூ.40,000க்கு பதில் 4 லட்சத்தை சிவம் நாயக் கணக்கிற்கு தவறுதலாக அனுப்பியுள்ளார்.

இதனை அறிந்த பாஸ்கரன், உடனடியாக சிவம் நாயக்கை அழைத்து பணத்தை காலையில் வாங்கிக் கொள்வதாக கூறியுள்ளார்.

பின்னர், நேற்று தொழிலாளர்கள் தங்கியிருக்கும் கட்டட வேலை நடக்கும் இடத்துக்கு சென்று பாஸ்கரன் பார்த்துள்ளார். ஆனால், அந்த தொழிலார்கள் இருவரையும் காணவில்லை.

பின்னர், அவர் விசாரித்த போது தான் பணத்துடன் அவர்கள் இருவரும் நேற்று இரவே ஊருக்கு புறப்பட்டுச் சென்றது தெரியவந்துள்ளது.

உடனடியாக கோவை மாநகர சைபர் கிரைம் பொலிஸில் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தார். பின்னர், அவர்களது வங்கிக்கணக்கு முடக்கப்பட்டது. இருந்தாலும், அவர்கள் அதற்குள் ரூ.1 லட்சம் பணத்தை எடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து பாஸ்கரன் கூறுகையில், “இத்தனை நாட்களாக வேலை செய்துவிட்டு துரோகம் செய்ததை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
2024 11 25 Pudukkudiyiruppu MV 2
ஏனையவை

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு: 275 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை மதிப்பளிக்கும் நிகழ்வுகள் பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வரும்...

images 7 2
ஏனையவை

டெல்லி கார் வெடிப்பு ‘தெளிவான பயங்கரவாதத் தாக்குதல்’: இந்தியாவுக்கு உதவியளிக்கத் தயார் என அமெரிக்கா அறிவிப்பு!

இந்தியத் தலைநகர் டெல்லியில் அண்மையில் இடம்பெற்ற கார் வெடிப்புச் சம்பவத்தை, ஒரு “தெளிவான பயங்கரவாதத் தாக்குதல்”...