இலங்கையர்களுக்கு குடியுரிமை

airport istock 969954 1617465951

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்களின் குடியுரிமை பெறுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக எதிர்வரும் 31ஆம் மற்றும் நவம்பர் மாதம் முதலாம் திகதிகளில் நடமாடும் சேவைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுமார் 7,000 குடும்பங்களைச் சேர்ந்த 12, 500 இற்கும் மேற்பட்டவர்கள் வட மாகாணத்திற்கு திரும்பி மீண்டும் குடியேறியுள்ளனர்.

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மேற்பார்வையில், அமைச்சுடன் தொடர்புடைய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளின் பங்களிப்புடன் இந்த நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.

#SriLankaNews

Exit mobile version