Untitled 1 1
இந்தியாஏனையவைசெய்திகள்

கண்ணாடி பாட்டில்களில் கண்டெடுக்கப்பட்ட சிசுக்களின் சடலங்கள்! அதிர்ச்சி சம்பவம்

Share

கண்ணாடி பாட்டில்களில் கலைக்கப்பட்ட 7 சிசுக்களின் சடலங்கள் கர்நாடகாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள நல்லா நதிக்கரையில் நேற்று துணிகளை துவைக்க வந்த சிலர் அங்கு கிடந்த கண்ணாடி பாட்டில்களில் கலைக்கப்பட்ட சிசுக்களின் உடல்கள் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் பொலிசாருக்கு உடனடி தகவல் அளித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் பாட்டில்களை கைப்பற்றி அவற்றை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் அவற்றை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்ப வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பொலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து எம்.எல்.ஏ. பாலச்சந்திர ஜர்கிஹோலி கூறுகையில், இதுபோன்ற நிகழ்வுகள் பொதுச் சமூகத்திற்கு பெருத்த அவமானம் என தெரிவித்தார்.

இச்சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17de3780 a0fb 11f0 b741 177e3e2c2fc7.jpg
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் விபத்து: டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் நடிகர் விஜய் நேரில் ஆஜர்!

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் திகதி கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

126381210
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் விசாரணை: விஜய் நாளை டெல்லி பயணம்; பலத்த பாதுகாப்பு வழங்குகிறது டெல்லி காவல்துறை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவின் (CBI) விசாரணைக்கு முன்னிலையாக, தமிழக...

1961684 mkstalin3
செய்திகள்இந்தியா

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்: இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த உயர்மட்டத் தலையீடு அவசியம்!

இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை களைந்திட...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...