கொவிட் நோயிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் கைதிகளுக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.
02 தடுப்பூசிகள் கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், 02 கட்ட தடுப்பூசிகளையும் பெற்றவர்களுக்கு 03 ம் கட்ட தடுப்பூசி வழங்கப்படும்.
இவ்வாறு சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் நிர்வாக மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.
18,453 கைதிகளுக்கு மூன்றாவது கட்ட தடுப்பூசியாக பைசர் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைதிகளுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள வெலிக்கடை, மெகசின், கொழும்பு ரிமாண்ட், வடரெகா, மஹர மற்றும் நீர்கொழும்பு ஆகிய சிறைச்சாலைகளுக்கு கைதிகளுக்கு இன்று மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டது.
இந்நிலையில், எதிர்வரும் நாட்களில் ஏனைய சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
#SrilankaNews

