19 4
ஏனையவை

சிறைச்சாலை அதிகாரிகள் பலருக்கு அதிரடி இடமாற்றம்!

Share

சிறைச்சாலைத் திணைக்களத்தின் முக்கிய அதிகாரிகள் பலருக்கும் அவர்கள் பணியாற்றி இடங்களில் இருந்து அதிரடியாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு சிறப்பு தர கண்காணிப்பாளர்கள், ஒரு கண்காணிப்பாளர், எட்டு உதவி கண்காணிப்பாளர்கள் மற்றும் ஐந்து சிறைச்சாலைகளின் பதில் கண்காணிப்பாளர்கள் ஆகியோர், தற்போது அவர்கள் பணிபுரியும் இடங்களிலிருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் வடக்கு கிழக்கின் சிறைச்சாலை அதிகாரிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த இடமாற்றங்கள் 2025 ஜூலை 02 முதல் நடைமுறைக்கு வருகின்றன.

அதன்படி, சிறப்பு தர சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஏ.சி. கஜநாயக்க – போகம்பரை சிறைச்சாலையிலிருந்து சிறைச்சாலை தலைமையகத்திற்கு மாற்றப்படுகிறார்.

சிறப்பு தர சிறைச்சாலை கண்காணிப்பாளர் டி.ஆர்.எஸ். சில்வா – மஹர சிறைச்சாலையிலிருந்து வெலிகட சிறைச்சாலைக்கு மாற்றப்படுகிறார்.

செயல்பாட்டு சிறைச்சாலை கண்காணிப்பாளர் சுதன் ரோஹன – கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து மஹர சிறைக்கு மாற்றப்படுகிறார்.

உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் எல்.பி. வர்ணகுலசூரிய – வாரியபொல சிறைச்சாலையிலிருந்து போகம்பர சிறைக்கு மாற்றப்படுகிறார்.

உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் வி. அபேதீர – கேகாலை சிறைச்சாலையிலிருந்து வாரியபொல சிறைக்கு மாற்றப்படுகிறார்.

உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் கே. டெப் – களுத்துறை சிறைச்சாலையிலிருந்து பூசா சிறைக்கு மாற்றப்படுகிறார்.

உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் பி. பிரேமதிலக – இலங்கை சிறைச்சாலை அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படையிலிருந்து அனுராதபுரம் சிறைக்கு மாற்றப்படுகிறார்.இலங்கை உணவகம்

உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் பி. பெரேரா – பல்லேகலை சிறைச்சாலையிலிருந்து மெகசின் சிறைக்கு இடமாற்றப்படுகிறார்.

உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஏ. உதயகுமார – பூஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து களுத்துறை சிறைக்கு மாற்றப்படுகிறார்.

உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் என். உபுல்தெனிய என்ற பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துசார உப்புல்தெனியவின் சகோதரர் – மகசின் சிறைச்சாலையிலிருந்து வடரேக திறந்தவெளி சிறை முகாமுக்கு மாற்றப்படுகிறார்.

உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஆர். பிரபாத் – வீரவில திறந்தவெளி சிறைச்சாலை முகாமிலிருந்து கொழும்பு விளக்கமறியல் சிறைக்கு மாற்றப்படுகிறார்.

உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஏ. ராஜகருணாநாயக்க – சிறைச்சாலை தலைமையகத்திலிருந்து இலங்கை சிறைச்சாலை அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படைக்கு மாற்றப்படுகிறார்.

உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் பிரதீப் வசந்த குமார – வட்டரேக திறந்தவெளி சிறை முகாமிலிருந்து மாத்தறை சிறைக்கு இடமாற்றப்படுகிறார்.

உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் என்.பெர்னாண்டோ – அகுனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து வீரவில சிறைக்கு மாற்றப்படுகிறார்.

உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் மங்கள வெலிவிட்ட – மாத்தறை சிறைச்சாலையிலிருந்து பல்லேகலை சிறைக்கு மாற்றப்படுகிறார்.

உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் குமார எதிரிசிங்க – மஹர சிறைச்சாலையிலிருந்து கேகாலை சிறைச்சாலைக்கு இடமாற்றப்படுகிறார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69035b0d8bf92
இலங்கைஏனையவைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை விதிப்பு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக...

Weligama Chairman shooting
ஏனையவை

லசா கொலையில் புதுத் திருப்பம்: உடந்தையாக இருந்தது நெருங்கிய நண்பரே என அதிர்ச்சி தகவல்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலையில் துப்பாக்கிதாரிக்கு உதவிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்,...

25 69020810f343e
ஏனையவை

கல்கிசை நீதிமன்று: அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்த சிறைக்கைதியின் செயல்.

நீதிமன்றத்தின் வேண்டுகோளின் பேரில் இன்று (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தின் களஞ்சிய அறையை சுத்தம் செய்ய...

25 6852cf07dcfea
ஏனையவை

தேங்காய் விலை தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் சரிவு: இடைத்தரகர்களால் சந்தை விலை உயர்வு என குற்றச்சாட்டு

நாட்டில் வாராந்திர ஏலத்தில் தேங்காயின் சராசரி விலைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் 5 சதவீதம் சரிந்துள்ளதாக...